வீட்ல விசேஷம் ரசனையான படம் நெகிழ்ந்த ஊர்வசி!
"RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் " - நடிகை ஊர்வசி
இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படும் நடிகை ஊர்வசியின் பங்கு, அவர் நடிக்கும் திரைப்படங்களின் மதிப்பை உயர்த்துகிறது. குறிப்பாக, படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்தால், பார்வையாளர்களின் இதயங்களிலும் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு நடிப்பை வெளிப்படுத்தி முழுத் திரையையும் ஆட்கொண்டுவிடுவார். ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக இருக்கும் RJ பாலாஜி நடித்த “வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் அத்தகைய ஒரு பாத்திரத்தில் அவர் மீண்டும் நடித்துள்ளார்.
இது குறித்து நடிகை ஊர்வசி கூறியதாவது..,
“வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்தது. மிகவும் அரிதாகவே, ஒரு கலை...




