#srilanka #srilankanews #srilankpoliticalcrisis #srilankan
புலம் பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்தால் இலங்கையை காப்பாற்றலாம்!? கோடங்கி பார்வை
https://www.youtube.com/watch?v=VxxelmgRyqU
கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது.
இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது.
தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையானது....
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்கள் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது.
இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், தற்போது வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் வன்முறை தொடர்பாக காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்....
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' படம் உலகம் இன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது.
இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கை, கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விஜய் படமான ‘பீஸ்ட்’ ரிலீசாகி உள்ளது.
கடும...
இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து, அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடுகிடுவென விலை உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் சத்திரத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆறு நபர்கள் நிற்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீஸார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இலங்கை தலைமன்னார், யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரியவந்துள்ளது.
...