வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

Tag: srilanka financial crisis

புலம் பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்தால் இலங்கையை காப்பாற்றலாம்!? கோடங்கி பார்வை

புலம் பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்தால் இலங்கையை காப்பாற்றலாம்!? கோடங்கி பார்வை

HOME SLIDER, kodanki voice, politics, World News, உலக செய்திகள், வீடியோ
#srilanka #srilankanews #srilankpoliticalcrisis #srilankan புலம் பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்தால் இலங்கையை காப்பாற்றலாம்!? கோடங்கி பார்வை   https://www.youtube.com/watch?v=VxxelmgRyqU  
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது. தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையானது....
இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா!

இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சரக்கு கப்பல் மூலம் இது விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நடவடிக்கையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இந்த எரிபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமது நாட்டுக்கு இந்தியா பெரிய  அளவில் உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவ...
இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர். இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இதில்,  நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சரா...
கடும் எதிர்ப்பால் சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்… தொடரும் முழு ஊரடங்கு… பதட்டத்தில் இலங்கை!

கடும் எதிர்ப்பால் சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்… தொடரும் முழு ஊரடங்கு… பதட்டத்தில் இலங்கை!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
கடும் எதிர்ப்பால் சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்... தொடரும் முழு ஊரடங்கு... பதட்டத்தில் இலங்கை! இலங்கையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதோடு, சமூகவலைதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால் அமைச்சர் நமல் ராஜபக்சே உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சமூகவலைதளங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தவித்து வரும் பொதுமக்கள், அரசின் அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, நாடு முழுவதும் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கொழும்பு வீதியில் படுத்து உறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற போராட்டங்கள் நாடு முழுவதும் பரவும் என்ற அச்சமடைந்துள...