செவ்வாய்க்கிழமை, மே 24
Shadow

Tag: TN Government

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப்பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள் தமிழக மக்களால் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள நாவலப் பிட்டியில். 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ல் பிறந்தார். தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கி பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்...
கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு!

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு! தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன் அடிப்படையில் தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 5000 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ. 15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ. 7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 30,000 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 25,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டர் தேவையில்லையெனில் தொகுப்பு கட்டணம் ரூ. 27,100 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்! சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசிவிர் மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு...
தமிழக அரசு அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்!

தமிழக அரசு அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக அரசு அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்! ஆவின்பால் விலை குறைப்பு அறிவிப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் நீல நிறம் லிட்டருக்கு ரூ.40, அரை லிட்டர் ரூ.20-க்கும், ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூ.22-க்கும், ஆவின் ஆரஞ்சு அரை லிட்டர் ரூ.24-க்கும், ஆவின் இளஞ்சிவப்பு நிறம் அரை லிட்டர் ரூ.18.50-க்கும், நாளை முதல் விற்பனை செய்யப்படும். டீமேட் எனப்படும் பால் லிட்டருக்கு ரூ.57-க்கு விற்கப்படும். பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்டைதாரர்களுக்கு ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.37-க்கும், அரை லிட்டர் ரூ.18.50-க்கும் கிடைக்கும். பச்சை நிறமுள்ள அரை லிட்டர் பால் ரூ.21-க்கும், ஆரஞ்சு நிறம் ரூ.23-க்கும், இளஞ்சிவப்பு நிறம் ரூ.18-க்கும் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் ஏற...
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை… ஐகோர்ட்டில் அரசு தகவல்!

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை… ஐகோர்ட்டில் அரசு தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை... ஐகோர்ட்டில் அரசு தகவல்! ரெம்டெசிவிர் மருந்து தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது என்றும் ஒரு பத்திரிகையில் இன்று செய்தி வெளியானது. அந்த செய்தியை அடிப்படையாக வைத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பின்னர், இன்று காலையில் கோர்ட்டு தொடங்கியதும், இதுகுறித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் நீதிபதிகள் தகவல் தெரிவித்தனர். மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திலும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாக அட்வகேட் ஜெனரலிடம் நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு குறித்து தமிழ...
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்!

கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்! தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள் மாஸ்க் அணிவதை ஒழுங்குபடுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகள் நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த வாரம் முதல் சராசரி நோய்த்தொற்று 3900 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.41 சதவீதம் என குறைவாகவே உள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 34.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் இதுவரை விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.88 கோடி அபராதம் வசூலிக...