பாலா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷ்!
மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் இப்...
முக ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் வைத்த விஜய்சேதுபதி!
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் 14 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் உள்பட 14 கோரிக்கைகள் அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றும்படியும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்பட 67 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதாக தகவல்கள்...
லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாபம் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவக...
மக்களால் வெளியிடப்பட்ட ரஜினிகாந்த் பேட்ட பட பாடல்கள்..!.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் மக்களால் வெளியிடப்பட்டது, 8828888028 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பொதுமக்களே பேட்ட திரைப்படத்தின் பாடல்களை வெளியிட...
விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி
விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ்.
இது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இய...
வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம், ரிஷி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி.
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வி.பி.விஜி. இப்படம் (அக்டோபர் 18) உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி படத்தில் நடித்த சிறுவர்கள் ஆறு பேரையும், இயக்குனர் வி.பி.விஜியையும் அழைத்து பாராட்டி உள்ளார்....
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள்.
ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது.
இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்...