Tag: vishnu vishal
ரஜினி படத்தை முடக்க விஜய் ரசிகர் சதி? ???? USA ரிலீஸ் காலட்டா ????
CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
ரஜினி படத்தை முடக்க விஜய் ரசிகர் சதி? ???? USA ரிலீஸ் காலட்டா ????
https://youtu.be/-C9Vp8Nk7ic
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இணையும் பிரபல நடிகை!
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார்.
இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன்...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி!
நடிகர் விஷ்ணு விஷால் & இயக்குநர் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி.
நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார். தொடர் வெற்றியைத் தரும் திரைப்படங்களைத் தருவதன் மூலம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களால் மிகவும் மதிப்புமிக்க நட்சத்திரமாகப் பாராட்டப்படுகிறார் .
இயக்குநர் ராம் குமார் திரையில் தனித்துவமான உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதைகளைப் படைத்து வெற்றி பெற்றுள்ளார். அவரது முதல் இயக்கமான 'முண்டாசுப்பட்டி' நகைச்சுவை திரைப்படமாக இருந்தபோதிலும், அவர் தனது இரண்டாவது திரைப்படமான 'ராட்சசன்' மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அப்படம் இதயத்தை அதிரச்செய்யும் உளவியல் திரில்லராக அசத்தியது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் அவர்களின் ...
நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கிற்காக விஷ்ணு விஷாலிடம் விசாரணை!
நிலம் வாங்கி தருவதாக நகைச்சுவை நடிகர் சூரியிடம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
அதை ஏற்று நடிகர் விஷ்ணுவிஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.
அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது தந்தை ரமேஷ்கொடவாலாவிடமும் மத்திய குற்றப...
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!
நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிள்ளார்....
தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்!
தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்!
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனுஷுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ !
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ !
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘எப்.ஐ.ஆர்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட...
தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு காரணம் விஷால் அல்ல – விஷ்ணு விஷால்
தமிழ் படங்களின் வெளியீடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்தது. படங்களின் வெளியீடு தேதிகளை அந்த குழு நிர்ணயம் செய்கிறது. அதன்படி, வருகிற 21-ந் தேதி, ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு,’ விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி,’ விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்பட சில படங்கள் வெளிவர உள்ளன
தொடர்ந்து தனுஷ் நடித்த ‘மாரி-2’ சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ உள்பட சில படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.இதனால் குறைந்த முதலீட்டு படங்களை தயாரித்த பட அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். குழப்பம் நிலவியது. அதைத்தொடர்ந்து 21-ந் தேதி, யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.
இதுபற்றி ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-“பிரச்சினைகள...

