செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: உதயநிதி ஸ்டாலின்

‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட்!

‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. https://twitter.com/RedGiantMovies_/sta...
நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்க்கும் உதயநிதி  ஸ்டாலின்!

நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்க்கும் உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே விரைவில அவ்ருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நாளை மறுநாள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என தகவல்கள் வெளியானது. உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிகிறது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுதினம் அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
“வாழை” – மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் படபிடிப்பு தொடங்கியது!

“வாழை” – மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் படபிடிப்பு தொடங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்...
கமலுடன் மீண்டும்  இணையும் உதயநிதி!

கமலுடன் மீண்டும் இணையும் உதயநிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (25-07-2022) சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் ப...
அருள்நிதியுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

அருள்நிதியுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'டைரி'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. https://twitter.com/RedGiantMovies_/status/15508...
நெஞ்சுக்கு நீதி  படத்தை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெஞ்சுக்கு நீதி படத்தை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நெஞ்சுக்கு நீதி  படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  ‘நெஞ்சுக்கு நீதி’  திரைப்படத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மே மாதம் 20-ந்தேதி அன்று வெளியாக உள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது....
இளையராஜா கருத்தை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது தவறு- உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

இளையராஜா கருத்தை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது தவறு- உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உடற்பயிற்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட வளைய சுற்றுத்தர அமைப்புகளை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியது அவரது சொந்த கருத்து ஆகும். இந்த விவகாரத்தில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தலைவர்( மு.க.ஸ்டாலின்) சொல்லி விட்டார். எனவே, அவருடைய கருத்தை நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறுதான். இவ்வாறு அவர் கூறினார்....
கமலுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

கமலுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ராஜ்கமல் பி...
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பரியேறும் பெருமாள், கர்ணன் படப் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ்  தனது அடுத்த படமான மாமன்னன் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்க இருக்கிறார்.  இது ஒரு அரசியல் திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சேலம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்கா அருகே புல்லட்டில் செல்லும் காட்சி பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாகப் பரவி வருகிறது. ...
மாரி செல்வராஜ் படத்தின் புதிய அறிவிப்பு!

மாரி செல்வராஜ் படத்தின் புதிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் நாளை(04.03.2022) காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அவர்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ...