டெல்லி, மும்பையில் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு விழா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். டெலிவிஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது. முதலில் மறைமுகமாக இருந்த இந்த காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது.
4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு கேட்டு இருந்தார். இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெறும் என்று யூகங்கள் வெளியானது. ஆனால் எந்த தேதியில் திருமணம் என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. இந்து முறைப்படி இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெர...









