வியாபார தளமாக மாறிய ICAF நடத்தும் 14 வது உலக திரைப்பட விழா !
சென்னையில் ஆரம்பத்தில் பெரிய அளவில் விளம்பரதாரர்கள் இல்லாத சமயத்திலும், அரசின் உதவிகளும் இல்லாத நிலையிலும், ஆனந்த் திரையரங்கம், பைலட் திரையரங்கம், போன்ற இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது, உலக திரைப்பட விழா !
படங்களின் தேர்வுகளும் பாராட்டலாம்.
டிசம்பர் இறுதியில் நடைபெற வேண்டிய நிகழ்வு புரட்சித் தலைவி மறைவாக தள்ளி வைத்து, தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிறமங்களை சந்தித்துள்ளதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே சமயத்தில், காசினே போன்ற திரையரங்குகளில் ( நிர்வாகப் பணிகள் உட்பட ) திரைப்பட விழா நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது.
வடபழனியில் உள்ள பலாசாவில் தினமும், பலர் அவமதிக்கப்படுகின்றனர். விழா குழுவினர் அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஆர்.கே.வி ஸ்டுடியோஸ் ஆறுதல் என்றே சொல்லலாம், நன்றி.
இந்த முறை சரியான படங்களையும் தேர்வு செய்யவில்லை, குறைந்த அளவே நல்ல...
