புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

கமல் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம்- மதுரை பொதுக்கூட்டத்தில் கொடியை ஏற்றி வைத்து அறிவிப்பு

கமல் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம்- மதுரை பொதுக்கூட்டத்தில் கொடியை ஏற்றி வைத்து அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இன்று தொடங்கினார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை வந்தடைந்த கமல், இரவு 7.15 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுரை ஒத்தக்கடை மைதானத்தை வந்தடைந்தார். அப்போது தன் காரில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் அழைத்து வந்தார். அதன்பின்னர் பொதுக்கூட்டம் தொடங்கியது இயக்குனர் ராசி அழகப்பன், கவிஞர் சினேகன் பேசியதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மேடைக்கு வந்த கமல், தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து...
நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் சினிமா படமாக தயாராகிறது. சாவித்திரியின் சிறுவயது வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, பின்னர் சொந்த படம் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி இறந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன. சாவித்திரி குடும்பத்தினர், நண்பர்கள், பழம்பெரும் நடிகர்கள் ஆகியோரிடம் பேசி தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் சமந்...
சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் சினிமாவை தவிர்த்து வேறு வாழ்க்கையும் இருக்கிறது. பாடல், இசையில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார். சில மாதங்களுக்கு முன்னால் சுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தன. சுருதிஹாசனின் தாய் சரிகா மும்பையில் வசிக்கிறார். மைக்கேலை அழைத்துச்சென்று சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படங்களும் வெளிவந்தன. பின்னர் சென...
கமல் கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி

கமல் கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமலின் புதிய கட்சியில் இணைந்து பணியாற்றுவதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரியான மவுரியா கமல் கட்சியில் சேர்ந்துள்ளார். மயிலாப்பூரில் துணை கமி‌ஷனராக பணியாற்றிய இவர் கடைசியாக சிறைத் துறையில் ஐ.ஜி.யாக இருந்தார். பணிக்காலம் முடியும் முன்னரே, விருப்ப ஓய்வு பெற்று சென்று விட்டார். சென்னை கானாத்தூரில் வசித்து வருகிறார். கமல் கட்சியில் சேர்ந்தது பற்றி போலீஸ் அதிகாரி மவுரியா அளித்த பேட்டி வருமாறு:- கே:- போலீஸ் அதிகாரியாக இருந்த உங்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? ப:- போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய காலங்களிலேயே அரசியலை கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். அரசியலில் இருந்தால் மக்களுக்கு நல்லது செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை அப்போது உணர்ந்துள்ளேன். நேரம் வரும் போது அரசியலில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்...
அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன்

அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசன் ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:- 37 ஆண்டுகளாக நற்பணி செய்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு கட்டமைப்புக்கான அஸ்திவாரம் எங்களுக்கும் உள்ளது. அதைப் பலப்படுத்த வேண்டும். ஆனால், இருப்பவர்களை உற்சாகப்படுத்திச் செயலாற்றப் பணிக்கிறோம். பலரைப் புதிதாக இணைக்கிறோம். ஆனால், ‘இன்னும் பள்ளமே தோண்டலையே’ என்று பேசுவது சரியானதல்ல. எங்கள் கோபங்களைச் சொல்ல இது நேரமல்ல. இருந்தாலும், கேட்பதால் சொல்கிறேன். நற்பணி செய்வதற்கான தண்டனைகளை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். வெள்ளைக்காரன் ஆட்சியில் காந்தியார் நற்பணி செய்ய சிரமப்பட்டார் என்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இது என் குடி, என் அரசு. இங்கேயே நாங்கள் நிறைய அனுபவித்துள்ளோம். உதாரணத்துக்கு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, ஓர் அமைச்சரை அவமானப்படுத்தி விட்டார் என்று சொல்ல...
கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு – கமல்

கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு – கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார். இதனை அடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், கமல் மீனவர்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலாம் வீட்டுக்குச் சென்றது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார். “பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்...
போலி பில் போட்டு கோடிகள்  சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்

போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம் திரையுலகில் சினிமா எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளருக்கு விழிபிதுங்கி ரத்தம் சுண்டி நாக்கு தள்ளி என சொல்லிக் கொண்டே போகலாம் அந்தளவுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்துதான் ஒவ்வொரு படங்களும் ரிலீஸ் ஆகிறது. இதற்கு காரணம், பல காரணங்களை சொல்லலாம். முக்கியமான காரணம், சரியான திட்டமிடுதல் இல்லாததுதான். விளம்பர மோகம் இருக்கிற சினிமாகாரர்களை நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் யாரும் ஈசியாக ஏமாற்றி விடலாம் என்பதற்கு இப்போது சொல்லப்போகும் செய்தி பெரிய உதாரணம். ‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதைப்போலவே நுனி நாக்கு ஆங்கிலமும், பெண் என்ற தகுதியும் இருந்தால் போதும் யாரையும் ஏமாற்றி விடலாம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. சென்னை தி.நகரில் ச...
‘நான் பூ அல்ல விதை’ – மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

‘நான் பூ அல்ல விதை’ – மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் நாளை மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். இதற்கிடையே, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித்தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா!” என ரஜினி, கமல் அரசியல் வருகையை மையமாக வைத்து விமர்சித்திருந்தார். மேலும், “தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன்.” என தனது கடிதத்தில் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ...
ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 2.0 படம் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்பட படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் ‘டப்பிங்’ பேசியும் முடித்து விட்டனர். கடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.0 படத்துக்கு பதில் ரஜினிகாந்தின் காலா படம் அதே நாளில் வெளியாகிறது. 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக...
அரசியலில் கவர்ச்சியான காகித பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது – மு.க.ஸ்டாலின்

அரசியலில் கவர்ச்சியான காகித பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசியலில் கவர்ச்சியான காகித பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது - மு.க.ஸ்டாலின் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கழக நிர்வாகத்திற்காக உள்ள 65 மாவட்டங்களில், இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த நகர , ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி வட்ட கழக நிர்வாகிகளையும், கழகத்தின் துணை அமைப்பின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளேன். சந்திப்பு என்பதை விட உணர்வுகளின் சங்கமம் என்பதே சாலப் பொருத்தமானதாகும். கழகத்தினரின் திருமுகங்களை மாநாடுகளில் கண்டிருக்கிறேன், பொதுக் கூட்டங்களிலும் தேர்தல் பரப்புரைகளிலும் பார்த்திருக்கிறேன். கழகத்தினர் நடத்தும் இயக்க நிகழ்வுகளிலும் இல்ல நிகழ்வுகளிலும் பலரையும் நேரடியாகச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கழக ஆய்வுக் கூட்டம் என்ற முறையில் ஒவ்வொருவரிடமும் நேரில் களிப்புடன் க...