புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

பள்ளியில் பெண் ஆசிரியர் வெட்டிப் படுகொலை!

பள்ளியில் பெண் ஆசிரியர் வெட்டிப் படுகொலை!

செய்திகள்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 23 வயதான தனியார் பள்ளி ஆசிரியர் பள்ளி வளாகத்திலே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரம்யா. சம்பவத்தின் போது ரம்யா வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ரம்யாவுக்கு பள்ளி அருகிலே வீடு இருப்பதால், தினமும் சிக்கிரமே பள்ளிக்கு வந்துவிடுவார். அப்படி இருக்கும்போது, சம்பவத்தின் அன்று ராஜசேகர் என்பவருக்கும் ரம்யாவுக்கும் பெரும் வாதம் நடந்துள்ளது. அதன் பின்னரே ரம்யா கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜசேகரை ரம்யா திருமணம் செய்ய மாறுத்ததாலே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர். கல்லூரி நாட்கள் முதலே ராஜசேகருக்கும் ரம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 6 மாதத்திற்கு முன்பு ரம்யாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி...
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

CINI NEWS, செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா'. இது அஜித்தின் 50-வது திரைப்படம். அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் ‘மங்காத்தா 2' குறித்த தகவல்களை வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அதிரடியான பதிலை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இது பற்றி பேசிய வெங்கட் பிரபு, ‘மங்காத்தா 2' படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால், கண்டிப்பாக அஜித்துடன் ஒரு திரைப்படம் பண்ண ஆவலுடன் இருக்கிறேன். மங்காத்தா 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். மேலும் நிச்சயமாக அஜித்துடன் இன்னொரு படமும் பண்ணுவேன் என்று தெரிவித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்பு...
காதலின் உணர்ச்சி… தடம் சொல்லும் ’தடயம்’!

காதலின் உணர்ச்சி… தடம் சொல்லும் ’தடயம்’!

CINI NEWS, செய்திகள்
இந்திய சமூகத்தில் மலிந்து கிடக்கிற காதலில்லாத திருமணங்களின் ஊடே, ஒரு திருமணமில்லாத காதல் பற்றியதோர் திரைப்படம், தடயம். ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான். அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக, தாளா பரவசங்களின் காட்சிப் படிமங்களாக மாற்றித் தந்திருக்கும் திரைப்படம் தான் தடயம். இத்திரைப்படத்தை, தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரான தமயந்தி எழுதி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர்கள் சமுத்திரகனி, மீரா ...
உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் பிரபு..!

உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் பிரபு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
உண்மைச்சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு! பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி  தயாரிப்பில், வெற்றிமாறன் உதவியாளர் இப்படத்தை இயக்குகிறார்!! பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி (LLP) தயாரிப்பில் வெளியான ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்கள் விமர்சனரீதியாக பாராட்டை பெற்று, வர்த்தகரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். படத்தை இந்த ஆண்டு கோடையில் வெளியிட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். இப்படம் தமிழ்நாட்டில் நடந்த பரபரப்பான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக...
தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசமே கண்ணீர் விட்டு கதறிய வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர், நாடே இந்தத் துயர சம்பவத்தை நினைத்து வருந்தியது. இந்நிலையில் வீரர்கள் உயிரிழந்த வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும், கார்பெட் தேசிய பூங்காவில் மாலை 6.30 மணி வரை போட்டோஷூட்டில் இருந்திருக்கிறார் மோடி. தேசத்துக்காக உயிரிழந்தவர்களை விட ...
2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருதினை தட்டிச் சென்ற ஹிப்பி பட நாயகி!

2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருதினை தட்டிச் சென்ற ஹிப்பி பட நாயகி!

CINI NEWS, செய்திகள்
தெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் “ ஹிப்பி “ படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஒரே வருடத்தில் மூன்று ஹிந்தி படங்களில் நடித்ததற்காக இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார். பல ஹிந்தி பாடல்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த ந...
“பிரேக்கிங் நியூஸ்”… ஜெய் பட பேரே இதான்..!

“பிரேக்கிங் நியூஸ்”… ஜெய் பட பேரே இதான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய படம் பிரேக்கிங் நியூஸ்.! தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் நடிப்பில் உருவாக உள்ள புதிய படமான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தின் பூஜைகள் சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோஸ் நடைபெற்றது. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார்.மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விசுவல் எபோர்ட்டில் இப்படம் உருவாக உள்ளது. இயக்குனர் : ஆண்ட்ரு பாண்டியன் ஒளிப்பதிவு : ஜானி லால் இசை : விஷால் பீட்டர் ஆர்...
90ML ஓவியாவின் மரண மட்ட குத்தாட்ட பாடல் ரிலீஸ்..!

90ML ஓவியாவின் மரண மட்ட குத்தாட்ட பாடல் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml படத்தின் மரண மட்ட வீடியோ பாடல் வெளியானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஓவியா நடித்துத்திருக்கும் முதல் திரைப்படம் 90ml. அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் அகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியூ இயர் ஸ்பெஷல் பாடலான மரண மட்ட குத்து பாடல் வெளியானது. சிம்பு மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து எழுத்தியுள்ள இப்பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் பாடியுள்ளனர். https://youtu.be/Nuq3qkIcLIA...