செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

சாமியார் வேடத்தில் கஞ்சா அடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா..!

சாமியார் வேடத்தில் கஞ்சா அடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகள் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியாகி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார்கள். சமீபத்தில் சர்கார் படத்தில் விஜய் சுருட்டு பிடிக்கும் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது. சில தினங்களுக்கு முன் மதுபாட்டிலோடு விஷால் வெளியிட்ட அயோக்கியா பட போஸ்டரும் பெரும் சர்ர்சையில் சிக்கியது. இப்போது அந்த வரிசையில் சிக்கியிருப்பது நடிகர் அல்ல ஒரு நடிகை. ஹன்சிகா நடிக்கும் 50வது படம் மஹா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மஹா’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் ஹன்சிகா நடித்திருப்பது போல் போஸ்டரில் தெரிகிறது. ஹீரோயின் கதையம்சம் கொண்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியான நிலையில், சாமியார் வேடத்தில் ஹன்சிகா கஞ்சா அடிப்பது போன்ற போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர்...
லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா? நாளை தீர்ப்பு!

லண்டனில் இருந்து நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா? நாளை தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வங்கிகளில் ரூ 9,000 கோடி கடன் பெற்று தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து நாடு கடத்தும் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் ரூ 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கடன் மோசடி தொடர்பாக சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்...
தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு  காரணம் விஷால் அல்ல    – விஷ்ணு விஷால்

தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு காரணம் விஷால் அல்ல – விஷ்ணு விஷால்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் படங்களின் வெளியீடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்தது. படங்களின் வெளியீடு தேதிகளை அந்த குழு நிர்ணயம் செய்கிறது. அதன்படி, வருகிற 21-ந் தேதி, ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு,’ விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி,’ விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்பட சில படங்கள் வெளிவர உள்ளன தொடர்ந்து தனுஷ் நடித்த ‘மாரி-2’ சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ உள்பட சில படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.இதனால் குறைந்த முதலீட்டு படங்களை தயாரித்த பட அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். குழப்பம் நிலவியது. அதைத்தொடர்ந்து 21-ந் தேதி, யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதுபற்றி ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-“பிரச்சினைகள...
அதிமுகவில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு..!

அதிமுகவில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் தன்னை இன்று இணைத்துக் கொண்டார்.இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை அவரது வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு இன்று சந்தித்தார். அப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் என தெரிவித்துள்ளது....
டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந்தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். அன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல் மந்திரி பிணராயி விஜயன், புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த விழா அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டுக்கு நேரில் சென்று முக ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்...
மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்

மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி  நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது.இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார்.  கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்....
அடல்ஸ் ஒன்லி…  டோன்ட் ரீட் குட்டீஸ்… ரீட் ஒன்லி அபவ் 18+ விமர்சனம்…

அடல்ஸ் ஒன்லி… டோன்ட் ரீட் குட்டீஸ்… ரீட் ஒன்லி அபவ் 18+ விமர்சனம்…

HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
முன்னெல்லாம் குழந்தை குட்டியோட போய் பாக்குற மாதிரியான படங்களில் நடித்து வந்த விமல் முதல்முறையா குழந்தை இல்லாம குட்டியோட போனாலும் குழந்தை குடுக்குற மாதிரியான படத்துல நடிச்சிருக்கார் அதுதான் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு. படத்தின் பெயரைப்போலவே படம் தொடங்கியதில் இருந்து முடிகிறவரைக்கும் காம நெடியும்… காமெடியும் கலந்து கட்டி அடிக்கிறது… சில நேரங்களில் உச்சகட்ட ஆபாசம் தலை தூக்கினாலும் அந்த நேரத்திற்கு படம் பார்க்கிறவர்கள் சிரித்து விட்டு சே என்ன கருமம்டா இதற்கு போயா நாம் சிரித்தோம் என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை காமநெடிகள்… கதைன்னு சொல்லனும்னா ரொம்ப கஷ்டம்… அதேநேரம், சிங்கம்புலி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான்னு படம் முழுக்க வந்து அவங்க அவங்க பார்ட்டை ஒழுங்கா செய்துட்டு போறாங்க. ஆனந்தராஜ் காமெடி வில்லனா வந்து வழக்கம்போல அதகளம் பண்ணாலும் மன்சூர் நிலைமைதான் ரொம்ப பாவம்… ஒரு பக்க...
தளபதி 63 – அமெரிக்காவில் படப்பிடிப்பு

தளபதி 63 – அமெரிக்காவில் படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்வதற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ....
புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக அரசு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு ரூ.1,400 கோடி வழங்கி உள்ளது. அத்துடன் 29 பொருட்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கியது. ஆனால் தற்போது வரை புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையைத்தான் வழங்கி உள்ளது.  முதல்-அமைச்சர், அமைச்சர்கள் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் ஸ்டாலின் ஒருநாள் சென்று பார்வையிட்டு புயல் நிவாரண பணிகள் குறித்து விமர்சனம் செய்கிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் காவிரி படுகையில் மேகதாது அல்லது வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக சட்டசபையில் வரலாற்று சி...
அஜீத்தின் விஸ்வாஸ்சம் படத்தின் டிவி உரிமத்தை கைப்பற்றிய ரஜினி பட தயாரிப்பு..!

அஜீத்தின் விஸ்வாஸ்சம் படத்தின் டிவி உரிமத்தை கைப்பற்றிய ரஜினி பட தயாரிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. தல அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். முதன் முறையாக கிராமிய பின்னணியில் நடிக்கும் அஜித், மதுரையின் காவல் தெய்வமாக விளங்கும் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் மதுரை வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி வெளியான நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி ...