திங்கட்கிழமை, ஜூலை 6
Shadow

Author: Kodanki

நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால்

நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர். இதற்காக சமூக வலைதளத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்கள் வெளியிடப்பட்டன. முதலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்ன...
பயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்

பயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மூத்த நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ‘விஸ்வரூபம்’ புகழ் நடிகை பூஜா குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,‘விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பிற்கு ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தை அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்தனர். இதனால் உற்சாகத்தில் திளைக்கிறேன். கமல்ஹாசனிடம் மருதநாயகத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும்’ என்று என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் அவர் மருதநாயகத்தை தொடங்கினால், வாய்ப்பு கிடைத்தால் அதில் ...
நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார். 2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்...
சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து

சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர் அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார். அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என்று கூறியிருந்தார். மேலும் வைரமுத்து மீது புகார் அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, என்னுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் வழக்கு தொடர்வேன்’ என்றார். htt...
எழுமீன் டிக்கெட் விலையில் 30 லட்சம் மாணவர்களுக்கு சலுகை- தயாரிப்பாளர் அறிவிப்பு

எழுமீன் டிக்கெட் விலையில் 30 லட்சம் மாணவர்களுக்கு சலுகை- தயாரிப்பாளர் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம்...
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை செய்தியாளர்களிடம் வைகோ சங்கொலி வாரப் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நானும் பத்திரிகையாளர் என்பதால் உங்களிடம் பேசுகிறேன். பத்திரிகைத் துறையை மிரட்டி அச்சுறுத்தி பயமுறுத்தி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பக் கூடிய பிரிவுகளில் வழக்கு போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறித்து விடலாம் என்று ஆளுநர் மாளிகை திட்டமிட்டு சுயமரியாதையை இழந்து விட்ட முதுகெலும்பற்ற அ.தி.மு.க. அரசின் காவல்துறையைப் பயன்படுத்தி நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் ஆளுநரையோ குடியரசுத் தலைவரையோ வேலை செய்ய விடாமல் தடுக்கின்ற சட்டப்பிரிவு 124-இன்படி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பலாம். அந்தப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற ஒரு அதிகாரி டெபுடி செக்ரட்டரி...
”கொம்பு வச்ச சிங்கம்டா” படத்திற்கு தீவிரம் காட்டும் சசிகுமார்!

”கொம்பு வச்ச சிங்கம்டா” படத்திற்கு தீவிரம் காட்டும் சசிகுமார்!

CINI NEWS
சசிகுமார் நடிப்பில் விரைவில் உருவாக உள்ளது ”கொம்பு வச்ச சிங்கம்டா”. இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’ புகழ் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ளார். மதுரைக்கு அருகேயுள்ள கிராமம் ஒன்றில், இருவது வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கிறது இப்படம். இதனை ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மகேந்திரன், சூரி, ஹரீஷ் பெராடி நடிக்கவுள்ளனர். மேலும், கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னொரு ஹீரோவிடமும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறதாம். தற்போது, படத்தின் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி முதல் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தினை ஒரே ஷெடியூலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் சசிகுமார். படப்பிடிப்பை காரைக்க...
நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கவர்னர் ம...
”ஐரா” மூலம் இரட்டை வேட அவதாரம் எடுக்கும் நயன்தாரா!

”ஐரா” மூலம் இரட்டை வேட அவதாரம் எடுக்கும் நயன்தாரா!

CINI NEWS
"அறம்" படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்" திரை படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, "அவள்" படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர் அரங்கு அமைக்க,டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர். " நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து "ஐரா" படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந...