“எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு” – ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி
“எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”...‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்த தனது பயணம், நடிகர்கள் தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் தனது முதல் படத்தை இயக்கிய அனுபவம் குறித்து வளர்ந்து வரும் புதிய தலைமுறை இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்துகொள்கிறார்.
தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர்களின் வருகை தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. சிவகுமார் முருகேசன், அபிஷன் ஜீவிந்த், பாரி இளவழகன் உள்ளிட்ட புதிய தலைமுறை படைப்பாளிகள் தங்களுக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள ராஜா கருப்பசாமி, ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வித்தியாசமான திருமணத்தை மையம...








