மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்! – வரி கட்டாததால் ஐ. டி. ஆக்ஷன்!
வரி ஏய்ப்பு செய்ததால் வருமானத் துறையினர் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்தில் விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஸ்ரீவித்யா. 80களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பல்வேறு குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வசித்துவந்த இவர், 2006ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார். இவரின் இறப்புக்குப் பிறகு, இவரது அபிராமபுர வீட்டை அவரின் சகோதரர் கே.பி.கணேஷ்குமார் என்பவர் நிர்வகித்துவந்தார். அந்த வீடு தற்போது மாதம் 13,000 ரூபாய்க்கு வழக்கறிஞர் உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ. 45,28,000 வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டு ய்பாடிக்கப்பட்...









