தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்
சொத்து குவிப்புவழக்கில் சிறைத்தண்டனை விதிக் கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் அனுபவித்து வருவது மீண்டும் தெரிய வந்துள்ளது. சிறையை பார்வையிட்ட தேசிய மகளிர் ஆணைய தலைவியே இதை ஒப்புக்கொண்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறியது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டபோதிலும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் தான் அனைத்து வசதிகளும் சசிகலாவுக்கு செய...









