தமிழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட அறிக்கையில், "
அறிக்கையில், "தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, ...
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.
இவர் நாளைய இயக்குநர் சீஸன்=3 இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை ’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அற...
????மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனிவாவில் சிலம்பாட்டம் ஆடிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் வைகோ உரையாற்றினார்.
வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்துக்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் சிலர், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். இனப்படுகொலை செய்த ராணுவத்தினரில் சிலரும் அந்த கூட்டத்தில் இருந்ததாக வைகோ தெரிவித்திருந்தார்.
வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கினர். வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில...
இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் "ஸ்பைடர்" -
விமர்சனம் கோடங்கி
மித மிஞ்சிய பணம், தகுதிக்கு மீறிய செல்வாக்கு, தான் என்ற ஆணவம் இவை எல்லாம் எப்போது ஒரு நல்ல படைப்பாளிக்குள் நுழைகிறதோ அப்போது அவன் கற்பனைகள் பயன்படாமல் ... திறமைகள் பயன்படுத்தப் படாமல் பாழடைந்து கிடக்கும் இடங்களில் கிழிந்து தொங்கும் சிலந்தி வலை போல ஆகிவிடும். அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் "ஸ்பைடர்"..
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இதுவரை இப்படி ஒரு கேவலமான படத்தை கொடுத்தது இல்லை.
எந்த ஒரு படைப்பும் இயக்குனரின் திறமையை காட்டும் கண்ணாடி என்பார்கள். ஸ்பைடர் கண்ணாடி காட்டும் திறமை ஆழ் மன அழுக்கும், ஆணவமும், எதை எடுத்தாலும் ரசிக்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம், பணத்தை கோடிகளில் கொட்ட ஒரு கூட்டம் என்ற மமதையை வெளிப்படுத்துகிறது.
ஸ்பைடர் படு தோல்விக்கும், மோசமான விமர்சனம் வாங்க...
மரணத்திற்கு பின் இறுதி காரியங்களுக்கு தேவை படும் வண்டி, பூ அலங்காரம், மேளதாள ஆட்களை அனுப்பும் தொழில் செய்கிறவர் கதாநாயகன். பொறியியல் படித்தாலும் இந்த தொழிலை விரும்பி செய்கிறார்.
கோயில் குளத்தில் நீராடிவிட்டு துண்டுடன் கரையேறும் கதாநாயகனை அதே குளத்தில் தோஷ நிவர்த்திக்கு மூழ்கி எழும் கதாநாயகி நிக்கி கல்ராணி பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து "கடவுளே... கடவுளே... கடவுளே" என கத்துகிறார்.
அதன் பிறகும் ஒரு முறை பாத்ரூமிலும், இன்னொரு முறை தெருவிலும் ஏடாகூடமாக பார்க்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதுவே காதலாகவும் மாறி கடைசியாக காதலும் பிரேக் அப் ஆகிவிடுகிறது.
காதலித்த போது ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொடுத்த பரிசு பொருட்களை ஒரு ரிசார்ட்டில் திருப்பி கொடுக்க முடிவு செய்கிறார்கள். இந்த பொருட்களை அரசியல் கட்சி கொடுத்த பையில் வைத்து எடுத்து செல்கிறார் ஹீரோ.
தேர்தலில் அனுதாப...
இருமொழியில் உருவாகும் த்ரில்லர் படம் ‘ரிவெஞ்ச்’..!
ரோஹித் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இருமொழியில் உருவாகிவரும் படம் தான் ‘ரிவெஞ்ச்’.. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துக்கும் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை ரெஞ்சு பரிபள்ளி என்பவர் எழுதுகிறார்.
படத்தை மலையாள நடிகரும் இயக்குனருமான தினேஷ் பணிக்கர் தயாரித்து இயக்குகிறார். இவர் மலையாளத்தில் கிரேயான்ஸ், லெப்ட் ரைட் லெப்ட், சாப்பா குரிஷ் ஆகிய ஹிட் படங்கள் உட்பட கிட்டத்தட்ட 12 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர்.. இந்தப்படத்தின் கதை ஊடகம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை சித்திரிக்கும் விதமாக தயாராகிறது
மீடியாவில் பணிபுரியும் காதலர்கள் இருவரின் மேல் பயணிக்கும் விதமாக கதை பயணிக்கிறது. காதலர்களாக கார்த்திக், அனுபமா இருவரும் நடிக்கின்றனர்.. அனுபமாவின் திறமை மீது நம்பிக்கை வைத்து, தீவிரவாதம் பற்றிய ...
நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார்அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.
இந்த தொடக்கவிழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதன் போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது...
‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க...’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார்.
இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள்.
சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்த படத்தின் இசையை, முன்னணி இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார்.
இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்...
‘விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்க...