லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது – சிபிஐ நடவடிக்கை
ப.சிதம்பரம் மந்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடுகளை திரட்டுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தது. இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்திருக்கிறார். இதற்காக அவரது நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து லஞ்சப் பணம் வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் மார்ச் 1-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனுக்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகர...









