இந்திய கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள்..!
போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.
சினிமா படங்களில் நடித்தது தவிர, பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் கடந்த 1-10-2016 முதல் 30-9-2017 வரை சல்மான் கான்(51) 232 கோடியே 83 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ள ஷாருக்கான் 170.05 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 100.72 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
அக்ஷய் குமார் மற்றும் முன்னாள் கிரிக்கெட் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் முறையே 4, 5 வது இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு 98.25 கோடி ரூபாயும், 82.50 கோ...









