நேச்சுரல் ஸ்டார்’ நானி இணைந்த “தி பாரடைஸ்’ படம்!
*2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் 'தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் இணைந்த 'நேச்சுரல் ஸ்டார்' நானி*
*ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா - சுதாகர் செருகுரி- SLV சினிமாஸ் - கூட்டணியில் தயாராகும் ' தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் 'நேச்சுரல் ஸ்டார் 'நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது*
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ' தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுகிறது. ' தசரா' படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு '...









