
லவ் மேரேஜ் 3/5
லவ் மேரேஜ் படத்தின் பெயரை பார்த்ததுமே ஜாலியான ரொமான்சான ஒரு படமாக இருக்கும் என நீங்கள் யோசித்தால் பாதி சரி மீதி…
சரி கதைக்கு வருவோம்… 30 வயசை தாண்டிய விக்ரம் பிரபு பல இடத்தில் பெண் தேடியும் கிடைக்கவில்லை… யாரோ சொல்லி வேறு ஊரில் இருக்கும் சுஷ்மிதாவை பெண் பார்க்க ஒரு மினி வேனில் விக்ரம் பிரபு குடும்பமாக வருகிறார்.
பெண்ணைப் பார்த்ததும் பிடித்து விடுகிறது… உடனே நிச்சயதார்த்தம் நடத்துகிறார்கள். ஆடுகிறர்கள் பாடுகிறார்கள்.
எல்லாம் முடிந்து ஊர் திரும்ப வேனில் ஏறினால் வண்டி ரிப்பேர் ஆகிறது.
சரி செய்ய முயற்சி செய்யும் போது திடீரென வைரஸ் நோய் பரவி வருவதால் அரசு ஊரடங்கு உத்தரவு போடுகிறது.
இதனால் வேறு வழியின்றி பெண் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்ப்படுகிறது.
இந்த சூழலில் திடீரென கல்யாண பெண் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்…
இதன் பிறகு என்ன நடந்தது… விக்ரம் பிரபுவுக்கு கல்யாணம் நடந்ததா… லவ் மேரேஜ் அப்படின்னு ஏன் பேரு வைச்சாங்க என்பதை எல்லாம் மீதி கதையில் சொல்கிறார் இயக்குனர் சண்முக பிரியன்.
ஜாலியாக ஒரு படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். கதை ஓகே… திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் ரசித்து இருக்கலாம்.
சத்யராஜ் கதாபாத்திரம் படத்தின் திரைக்கதையில் தேவையில்லாத ஆணி… காமெடிக்காக வைக்கிறேன் என இன்னும் சில தேவையில்லாத கதாபாத்திரங்களை திரைக்கதையில் புகுத்தி அதன் ஓட்டத்தை நிறுத்தி நிறுத்தி ஓட வைக்கிறார் இயக்குனர்.
விக்ரம்பிரபு ஏக்கம், கவலை, காதல் காரணமாக மனசில் நிற்க வேண்டிய படமாக வந்திருக்க வேண்டிய படம் சின்ன சின்ன சொதப்பல்களால் ஆவ்ரேஜ் படமாக மாறிவிட்டது.
கோடங்கி 3/5
