வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து உயர் படிப்பிற்காக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆன்லைன் மூலமாக கல்லூரி களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். என்ஜினீயரிங் படிப்பிற்கு கடந்த சில வருடங்களாக மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லை. பி.இ., பி.டெக் முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் அலைந்து திரிகிறார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டதால் பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் படிப்படியாக குறைந்து விட்டது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த ஆண்டு மூடப்படுகிறது. பல லட்சம் செலவு செய்து 4 ஆண்டுகள் பொறியியல் படித்து முடித்தாலும் அதற்கான வேலையோ, ஊதியமோ கிடைக்காததால் பொறியியல் படிப்பிற்கு பதிலாக கலை-அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் நாடிச் செல்கிற...
என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம் – தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம் – தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்பாண்டி உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இன்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை, மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்கிறது. மாவட்டந்தோறும் பயிற்சி பெற்ற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. 2 லட்சம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தை ஆ...
இறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் – மத்திய அரசு

இறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்க...
இளம்பெண் இசை அமைத்துள்ள  ” ஆண்டனி “

இளம்பெண் இசை அமைத்துள்ள ” ஆண்டனி “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் " ஆண்டனி " .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் "லால் " ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,'வெப்பம் ' ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த விழாவில்  பேசிய S .A சந்திரசேகர் பேசியவை " இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார். இந்த விழாவில்  ஜெயசித்ரா அவர்கள் பேசியவை " பட...
கேன்ஸ் பட விழாவில் கூண்டுக்குள் நூதன போராட்டம் நடத்திய மல்லிகா ஷெராவத்

கேன்ஸ் பட விழாவில் கூண்டுக்குள் நூதன போராட்டம் நடத்திய மல்லிகா ஷெராவத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாலியல் குற்றங்கள் உலகளாவில் அதிகரித்துள்ளன. ஹாலிவுட் படங்களிலும் இந்திய திரையுலகிலும் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து துன்புறுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குழந்தைகளும் இந்த கொடுமைகளில் சிக்குகிறார்கள். பாலியல் வன்மங்களுக்கு உள்ளாக்கி அவர்களை கொலை செய்யும் பாதகங்களும் நடக்கின்றன. இதற்கு எதிரான குரல் தற்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. ஹாலிவுட் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் ‘மீடூ’ இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டத்துக்கு பிறகு திரையுலக பெண்களை பாதுகாக்க புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் வில்லியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் பூட்டப்பட்ட கூண்டுக்க...
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா… – விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி

எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா… – விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் வாழத்துக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 'என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக ...
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கோவிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வருகை தந்தார். அவர், கோவிலில் உள்ள சொர்ணகணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தர்ப் பாராண்யேஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, சனிபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார்....
ஐஸ்வர்யாராய் படத்தில் என்னை தவறாக சித்தரித்துவிட்டனர் – ரிச்சா சத்தா வேதனை

ஐஸ்வர்யாராய் படத்தில் என்னை தவறாக சித்தரித்துவிட்டனர் – ரிச்சா சத்தா வேதனை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் ஷகிலா வேடத்தில் நடிப்பவர் ரிச்சா சத்தா. இந்தி திரையுலகில் போராடி முன்னுக்கு வந்துள்ள இவர் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து சரப்ஜித் இந்தி படத்திலும் நடித்து இருந்தார். சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா சத்தா அளித்த பேட்டி வருமாறு:- “நான் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நடிக்க வரவில்லை. என்னுடையை ஒவ்வொரு படத்திலும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதைதான் விரும்புகிறேன். கதாபாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதிக்க போராடுகிறேன். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேனே தவிர எவ்வளவு பணம் வருகிறது என்று கணக்கு பார்க்க மாட்டேன். அப்படிப்பட்ட என்னை ஐஸ்வர்யாராய் நடித்துள்ள சரப்ஜித் படத்தில் தவறாக சித்தரித்து விட்டனர். அது வேதனையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் எதற்காகத்தான் நடித்தோமோ? என்று நினைக்க த...
சூர்யா ஜோடியாகும் சாயிஷா சய்கல்

சூர்யா ஜோடியாகும் சாயிஷா சய்கல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிக்க, சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு...