சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, தொடர்ந்து வட மாநிலங்களில் பல பகுதிகளில் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர் மீதான சட்டம் மற்றும் தண்டனைகளை மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், இது போன்று பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை யாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுக்கு எதிராகப் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், `12 வயதுக்குட...









