கனிமொழி, ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்தி வரவேற்றார்..!
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இன்று டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினர். தங்கை கனிமொழியை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வரவேற்றார்
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் ஆர். ராசா , கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார்.
வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் 2ஜி வழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்பினர். விமானநிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சென்னை திரும்பிய கனிமொழியை வரவேற்க விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார் மு.க.ஸ்டாலின். ஆர்.ராசா மற்றும் கனிமொழி வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் திமுகவினர...









