பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டார் கவர்னர் புரோஹித்!
பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டியதற்காக வருத்தத்துடன் மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
அருப்புகோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியர் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்து அவர் கைது செயப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் நிறைவு பகுதியில் பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள ஆளுநர், “பெண் பத்திரிக்கையாளாரின் கேட்ட கேள்வி நல்ல கேள்வியாக இருந்ததால் அதனை பாராட்டும் விதமாக கன்னத்தை தட்டினேன், எனது பேத்தியாக நினைத்து தான் கன்னத்தை தட்டினேன்” எனவும் நானும் 40 வருடங்கள...









