கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்...
அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70படத்திற்கும் மேல் நடித்திருந்தார்...
அதில் ரமணா அரவான் அடிமைசங்கிலி நிலாவே வா கருப்பி ரோஜா தயா தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கி நடித்த படம் "வைரவன் "
சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தார்...ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.
தற்போது மீண்டும் கலைத்துறைலயில் கால் பதிக்கிறார்...
அரசியலில் நேர்மையானவர்.. ஊழலற்றவர்...தன்னலம் பார்க்காமல் பொது நல நோக்கம் கொண்டவர் என்று புகழப்பட்டவர் காமராஜர். அவர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
மது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல..ஒரு நாட்டையே சின்னா பின்...
ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் சீமராஜா படத்தின் இசை வெளியீடு!
ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான 'சீமராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர் டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழாவை மிகப்பெரிய வெற்றியாக மாற்ற மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
https://bit.ly/2uMRH03
மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளி...
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.
முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் முதுகெலும்பு யுவன் ஷங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர், கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவி...
சென்னையில் அரசு ஒப்பந்ததார் செய்யாதுரை வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமானவரி சோதனை
சென்னை உட்பட 30 இடங்களில் வருமானவரி சோதனையில் ரூ.160 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல்
அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.
சொகுசு கார்களில் சிக்கிய கட்டுக் கட்டான கரன்சி. அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்....
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படைமேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் 'கழுகு - 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது.
ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான ...
விமல் ஆஷ்னா சவேரி நடிக்கும்
" இவனுக்கு எங்கேயோமச்சம் இருக்கு "
AR.முகேஷ் இயக்குகிறார் விமல் ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" என்று பெயரிட்டுள்ளனர்...
இந்த படத்தை சாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சர்மிளா மாண்ரே கன்னட பட உலகின் பிரபல நடிகை. கன்னடத்தில் உள்ள பிரபல நடிகர்கள் அனைவருடனும் சுமார் 40படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் தயாரிப்பாளரான சர்மிளா மாண்ரேவை முதன் முதலாக கதா நாயகியாக கன்னடத்தில் அறிமுகப்படுத்தியவர் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் இயக்குனர் AR முகேஷ்.
இப்போது சர்மிளா மாண்ரே முதன் முதலாக தயாரிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பை தன்னை நடிகையாக அறிமுகப் படுத்திய இயக்குனருக்கு...
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் தெலுங்கு பட உலகினர் மீது பகீர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியிருந்தார். நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டார்கள் என குற்றம் சாட்டினார்.
அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்த்தினார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி கவனம இப்போது தமிழ் பட உலகம் மீது திரும்பி உள்ளது.
கடந்த வாரம் இயக்குனர் A.R.முருகதாஸ் குறித்து ஒரு பதிவு போட்டார். கோலிவுட் அதிர்ந்தது.
அதன் பின் நடிகர ஸ்ரீகாந்த், நடிகர் லாரன்ஸ் என அடுத்தடுத்து பகீர் குற்றச்சாட்டுகள் பதிவு செய்தார். எந்த குற்றச்சாட்டு குறித்தும் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பதில் அளிக்க வில்லை.
இந்த நிலையில் இயக்குனர் நடிகர சுந்தர்.சி குறித்த பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை ஸ்ரீரெட்டி பதிவிட்டார்.
இது குறித்து இயக்குன...