முதல் பாகத்தை விட 2ம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் – கோலிசோடா இயக்குனர் தகவல்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஃப் நோட் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி சோடா. கடுகு படத்தில் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது. கோலி சோடா 2 படத்துக்கு முழு எடிட்டிங் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார் எடிட்டர் தீபக்.
அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் வேலை பார்த்தது எங்கள் கேரியரில் உதவும். இது ஒரு டீம் ஒர்க் என்றார் பரத் சீனி.
சமுத்திரகனி சார் படப்பிடிப்பில் மிகவும் ஆதரவாக இருந்தார். விஜய் மில்டன் சார், படப்பிடிப்பில் தான் வசனங்களையே கொடுப்ப...









