Author: Kodanki
கடைசி வரை மக்களை சிரிக்க வைப்பதே என் ஆசை: வடிவேலு
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, நடித்துள்ள படம் ‘கத்திச்சண்டை’. இதை சுராஜ் இயக்கி இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் பேசிய வடிவேலு...
“மக்கள் முகத்தில் கொஞ்ச நாட்களாகவே சிரிப்பை பார்க்க முடியவில்லை. துன்பத்தையும், துயரத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கிறதுக்கே சங்கடமாக இருக்குது. மக்கள் கஷ்டப்படும் போது படத்தை விட வேண்டாம் என்றுதான் ‘கத்திச்சண்டை’ ரிலீசை தள்ளி வைத்தோம். கொஞ்ச நாளுக்கு பிறகு ‘ரிலீஸ்’ பண்ணலாமுன்னு இருந்தோம். இப்ப நாமாவது மக்களை சிரிக்க வைப்போம் என்று ‘கத்திச்சண்டை’ படத்தை ரிலீஸ் செய்கிறோம்.
கடைசிவரை மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஒரே மாதிரி நடித்தால் மக்களுக்கு போரடித்து விடும். அதனால் தான் விதம் ...
கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி
“நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன்மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. அப்போதும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடித்தேன். ஒருகட்டத்தில் சினிமா பிடித்தது. அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டேன்.
எனக்கு தன்னம்பிகை அதிகம். எதற்கும் பயப்படமாட்டேன். மாடலிங் செய்தபோது எனது தந்தை தூக்கம் இன்றி தவித்தார். மற்றவர்கள் தவறாக பேசுவார்களோ என்று பயந்தார். எனது படங்கள் விளம்பரங்களில் வெளியாகி நண்பர்கள் அவரை பாராட்டிய பிறகுதான் நிம்மதியானார்.
சுற்றி இருப்பவர்களுக்கு பயந்துதான் பெற்றோர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தே வந்து இருக்கிறேன். பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது வரை வெளியுலகம் பற்றி எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வந்த பிற...
நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்தது
கரீனா கபூர் கடந்த 2012-ம் ஆண்டில், இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் கர்ப்பமானார். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. நிறைமாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு நேற்று காலை 7 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு, ‘தைமுர் அலிகான் பட்டோடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குழந்தை பிறந்தது பற்றி கரீனா கபூர்-சயீப் அலிகான் ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:-
“எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு தைமுர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் நலம் வ...
நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி
திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது.
இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பே...
சினிமாவில் இருந்து என்னை ஒதுக்குகிறார்கள்: இலியானா வருத்தம்
விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இலியானாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. 2 இந்தி படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைகளுக்கு பிறகு டைரக்டர்கள் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் தனது நீச்சல் உடை படங்களை அவர் பரவ விட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் இலியானா வருத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“கடந்த 2 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எனக்கு படங்கள் இல்லை. இந்தியில் மட்டுமே ஓரிரு படங்களில் நடிக்கிறேன். டைரக்டர்கள் என்னை ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் இதுதான் எனக்கு கடைசி படம் என்ற உணர்விலேயே நடிக்க வேண்டி உள்ளது.
தென்னிந்திய மொழியில் ஒரு பட வாய்ப்பு வந்தது. டைரக்டர் கதையை சொல்லிவிட்டு நான்தான் கதாநாய...
சைத்தான் விமர்சனம்
நடிகர்கள்: விஜய் ஆன்டனி, அருந்ததி நாயர் இசை: விஜய் ஆன்டனி தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
முன்ஜென்ம கதை. அமரர் சுஜாதாவின் 'ஆ' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றெல்லாம் வந்த செய்திகள் சைத்தானுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது என்னமோ உண்மைதான். எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா சைத்தான்? சாப்ட்வேர் எஞ்ஜினீயர் விஜய் ஆன்டனிக்கும் அருந்ததி நாயருக்கும் திருமணமாகி, வாழ்க்கை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், விஜய் ஆன்டனி மண்டைக்குள் அடிக்கடி ஒரு குரல். அந்தக் குரல் அவரை திரும்பத் திரும்ப தற்கொலைக்குத் தூண்டுகிறது. நண்பர்களால் பிழைக்கிறார். இந்தக் குரலைப் பற்றி தன் மேலதிகாரியிடம் கூற, அவர் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப் போகிறார்.
காமெடியன் இல்லாத குறையைத் தீர்க்கிற மாதிரி ஒரு கேரக்டர் வில்லனுக்கு! பின்னணி இசையில் மிரட்டி இருக்கும் விஜய் ஆ...
கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்
நடிப்பு: ஜிவி பிரகாஷ், பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜெ பாலாஜி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஊர்வசி
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசை: ஜிவி பிரகாஷ்
தயாரிப்பு: டி சிவா (அம்மா கிரியேஷன்ஸ்)
இயக்கம்: ராஜேஷ் எம்
சென்னை டு பாண்டிச்சேரி... அல்லது பாண்டி டு சென்னை... இந்த ஒரு ட்ரிப்பில் ஒரு முழுப்படத்தையே எடுத்துவிடுவார் இயக்குநர் ராஜேஷ் எம். அப்படி எடுக்கப்பட்டுள்ள படம்தான் இந்த கடவுள் இருக்கான் குமாரு. காமெடிப் படத்துக்கு சீரியஸான கதை தேவையில்லை என்று முடிவு செய்து, ஒரு லைன் பிடித்திருக்கிறார். அது...
ஜிவி பிரகாஷுக்கும் ஆனந்திக்கும் காதல். ஆனால் இந்து - கிறிஸ்தவ பிரச்சினையைக் காட்டி ஆனந்தியின் அப்பா எம்எஸ் பாஸ்கர் மறுக்க, அது 'பேசுவதெல்லாம் உண்மை' ஊர்வசியால் நிரந்தரமாக பிரேக் ஆகிறது. கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது பாண்டிச்சேரிக்கு ஒரு பேச்சுலர் பார்ட்ட...
மாவீரன் கிட்டு விமர்சனம்
நடிகர்கள்: விஷ்ணு விஷால், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன், நாகி நீடு, ஃபெரேரா
ஒளிப்பதிவு: ஏஆர் சூர்யா
இசை : டி இமான்
வசனம் - பாடல்கள்: யுகபாரதி
மக்கள் தொடர்பு: ஜான்சன்
தயாரிப்பு: ஐஸ்வர் சந்திரசாமி, தாய் சரவணன், ராஜீவன் எழுத்து -
இயக்கம்: சுசீந்திரன்
நூறாண்டு தமிழ் சினிமாவில் இப்போதுதான் பொது வழியில் தலித்தின் பிணம் ஏன் போகக் கூடாது? உனக்குச் சமமா நான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தா தப்பா? விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதில் சாதிக்கு என்ன வேலையிருக்கிறது? என்ற கேள்விகளுடன் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.
மாவீரன் கிட்டு கதை மிக இயல்பானது... அன்றும் இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது, நிகழ்வுகளாக... செய்திகளாக. பள்ளி செல்ல பல மைல் தூரம் நடந்து போக வேண்டிய, பிணத்தை எடுத்துச் செல்லக் கூட பொது வழி மறுக்கப்பட்ட சமூகம் வாழும் கிராமத்தில் பிறந்த கிருஷ்...
