வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம் !!!
வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம் !!!
வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் டிவோ இசை நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற நான்கு தென்னிந்திய மொழி இசை சந்தைகளிலும் தனது தனித்துவத்தை நிலைநிறுத்தும்.
இந்திய பொழுதுபோக்குத் துறையில் முன்னணியில் இருப்பதற்கு வார்னர் மியூசிக் இந்தியாவிற்கு இந்த முதலீடு உத்தி பெரிதும் உதவும்.
வார்னர் மியூசிக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜெய் மேத்தா கூறுகையில், "வார்னர் மியூசிக் இந்தியா" பேனரின் கீழ் டிவோ பிராண்டைக் கொண்டு வர முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நடவடிக்கை நாட்டின் தென்னிந்திய பகுதியில் எங்கள் நிறுவனத்தை வலுப்படுத...









