வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வருண...
4 ஆண்டு இடைவெளிக்கு பின்  ஷாரூக் கானின் பதான்- பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

4 ஆண்டு இடைவெளிக்கு பின் ஷாரூக் கானின் பதான்- பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பதான் படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பதான் . இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , 'ஜூம் ஜோ பதான்' ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிங் கான்' 'பாலிவுட்டின் ராஜா'ஷாரூக் கான் திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளி...
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஜனவரி 31-ந் தேதியுடன் அவகாசம் முடிகிறது!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஜனவரி 31-ந் தேதியுடன் அவகாசம் முடிகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மின் வாரிய அலுவலகங்களிலும் ஆதார் நம்பரை இணைத்து கொடுக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைத்து வருகிறார்கள். படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர். மற்ற பொதுமக்கள்தான் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில் இதுவரை 2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 1 கோடியே 52 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்...
அசாம் முதல் மந்திரியிடம் அதிகாலை 2 மணிக்கு போனில் பேசிய ஷாருக் கான்!

அசாம் முதல் மந்திரியிடம் அதிகாலை 2 மணிக்கு போனில் பேசிய ஷாருக் கான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். வரும் 25-ம் தேதி படம் திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பதான் படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றனர். இதேபோல், அசாமில் கவுகாத்தி நகரில் பதான் படம் வ...

தமிழ் ரசிகனை அவமதித்து தெலுங்கில் விஜய் சக்சஸ் கும்மாளம் போட காரணம் இதுதான் – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
  தமிழ் ரசிகனை அவமதித்து தெலுங்கில் விஜய் சக்சஸ் கும்மாளம் போட காரணம் இதுதான் - கோடங்கி   https://youtu.be/S1c8bG-UUJE
மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !

மனோஜ்குமார் மஞ்சு, 6ix Cinemas , வருண் கொருகொண்டா இணையும் “வாட் த ஃபிஷ்” !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களம் இறங்குகிறார். 6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும், இப்படத்திற்கு வித்தியாசமாக 'வாட் தி ஃபிஷ்' 'WHAT THE FISH' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பெயரே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. உலகத்தரத்தில் அமைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தெரியாத பல அமானுஷ்யங்களை மனோஜ்குமார் மஞ்சு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. மனோஜின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஷ்ணு விஷால் & இயக்குநர் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி. நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார்.  தொடர் வெற்றியைத் தரும் திரைப்படங்களைத் தருவதன் மூலம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களால் மிகவும் மதிப்புமிக்க  நட்சத்திரமாகப் பாராட்டப்படுகிறார் . இயக்குநர் ராம் குமார் திரையில் தனித்துவமான உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதைகளைப் படைத்து வெற்றி பெற்றுள்ளார். அவரது முதல் இயக்கமான  'முண்டாசுப்பட்டி' நகைச்சுவை திரைப்படமாக இருந்தபோதிலும், அவர் தனது இரண்டாவது திரைப்படமான 'ராட்சசன்' மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அப்படம் இதயத்தை அதிரச்செய்யும் உளவியல் திரில்லராக அசத்தியது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் அவர்களின் ...
வென்றது விஜயின் வாரிசா?அஜித்தின் துணிவா?..

வென்றது விஜயின் வாரிசா?அஜித்தின் துணிவா?..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. கடந்த 11ம் தேதி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் யாருடைய திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது என்று கடும் போட்டி நிலவி வருகிறது. உலகளவில் துணிவு படத்தை விட வாரிசு படம் அதிக வசூல் செய்து கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் துணிவு படம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த 9 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே துணிவு திரைப்படம் ரூ. 98 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ. 97 கோடியும் வசூல் செய்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் துணிவு திரைப்படத்தின் வசூல் முதலிடத்தை அப்படியே தக்க வைத்துள்ளது என தெரிகிறது....
பிரிவினைவாத கட்சி என்று தி.மு.க.வை களங்கப்படுத்த கவர்னர் முயற்சி செய்தார்- டி.கே.எஸ். இளங்கோவன்!

பிரிவினைவாத கட்சி என்று தி.மு.க.வை களங்கப்படுத்த கவர்னர் முயற்சி செய்தார்- டி.கே.எஸ். இளங்கோவன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக கவர்னர். ஆர்.என். ரவிக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இதன் உச்சககட்டமாக தமிழ்நாடு என்று சொல்வதற்கு பதில் தமிழகம் என்ற வார்த்தையை கவர்னர் பயன்படுத்த தொடங்கினார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டை மாற்றினார். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று கூறி இருந்தார். எனது பேச்சின் அடிப்படை புரியாமல் கவர்னர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாத பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்றும் கவர்னர் தெளிவுப்படுத்தி இருந்தார். இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது...
பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்!

பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு பலர் சமூக ஊடகங்களில் மூலமாகவும், நேரிலும் வாழ்த்து...