வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

பொங்கல் பண்டிகை- தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

பொங்கல் பண்டிகை- தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்....
சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினிதான்… இது சின்னபுள்ளைக்குகூட தெரியும் – கோடங்கி

சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினிதான்… இது சின்னபுள்ளைக்குகூட தெரியும் – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
  சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினிதான்... இது சின்னபுள்ளைக்குகூட தெரியும் - கோடங்கி   https://youtu.be/xeHDltysEdM  
திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.... “ ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு ...
வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!

வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன. இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள். இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும். ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும். 5 நிமிடங்களுக:கு ஒருமுறை டேட்பிக்கள் பதிவேற்றம் செய்யப்படும். எந்த சாலைகளில் போக்குவரத்து நேரிசல் அதிகமாக காணப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை மாற்று பாதைகளில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட முடியும். இதற்கு முன்பு ஆங்காங்கே ...
மாவீரன் படத்தின் புதிய போஸ்டர்!

மாவீரன் படத்தின் புதிய போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் இனையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/ShanthiTalkies/status/1609521756292939776?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1609521756292939776%7Ctwgr%5Ee82efe710a81c4a89607097...
ரிலீஸ் தேதியை அறிவித்த சமந்தா படக்குழு !

ரிலீஸ் தேதியை அறிவித்த சமந்தா படக்குழு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியா...
புதிய சாதனை படைத்த துணிவு டிரைலர்!

புதிய சாதனை படைத்த துணிவு டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்ட இவரின் படத்திற்கு எப்போதுதுமே மவுசு அதிகம். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள துணிவு படத்திற்கும் அதே நிலை தான் நீடிக்கிறது. அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ஜிப்ரான் இசையில், ’சில்லா சில்லா’ பாடலும் ‘காசேதான் கடவுளடா’ பாடலும்  ‘கேங்க்ஸ்டா’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இதற்காக பல  திரையரங்க...
“என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? – யாரை மிரட்டுகிறார் அஜீத்

“என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? – யாரை மிரட்டுகிறார் அஜீத்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
"என்ன மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா?"- யாரை மிரட்டுகிறார் அஜீத்   https://youtu.be/FuJ4biORMLw
பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சு...
கோடிகளில் சென்சரி போட்ட “பதான்” படத்தின் ஓடிடி உரிமை!

கோடிகளில் சென்சரி போட்ட “பதான்” படத்தின் ஓடிடி உரிமை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பதான்' திரைப்படம் 2023-ஆ...