வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

வைரலாகும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வைரலாகும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (29.08.2022) காலை 11.11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜி.வி பிரகாஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://twitter.com/gvprakash/status/1563773862999105537?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembe...
வைரலாகும் ‘பகாசூரன்’ படத்தின் டீசர்!

வைரலாகும் ‘பகாசூரன்’ படத்தின் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் அறிவித்தபடி 'பகாசூரன்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நமது அடுத்த தலைமுறையை பாதுகாப்போம். நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகள் அவர்களின் பருவ வயதில் பாதுக்காப்புடன் வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த டீசர் தற்போது வைரலாகி வருகி...
விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய...
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகள் திடீர் போராட்டம்!

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகள் திடீர் போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராமநாதபுரம் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு 200-க்கும் மேற்பட்டோர் காவலாளிகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். வார்டுகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் நோயாளிகளை சந்திக்க கட்டுப்பாடுகளுடன் உறவினர்களை அனுமதித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி காவலாளிக்கும், நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த காவலாளிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவ...
வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் –  நல்லி குப்புசாமி

வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் – நல்லி குப்புசாமி

HOME SLIDER, NEWS, செய்திகள்
    *வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் - தொழிலதிபர் நல்லி குப்புசாமி* *வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ்* சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி  ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வள...
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சு நாட்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக அந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 'ஏ' பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, 2 முறை ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 5 முறை சாம்பியனான இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். 'சூப்பர் 4' சுற்றில் 4 அணிகள் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை-ஆப்கானிஸ்த...
பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த அருண் விஜய் !

பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த அருண் விஜய் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. அதன்பின்னர் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை நீண்ட இடைவெளிக்கு பிறகு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://t...
நடிகை சோனாலி போகட் மரணம்- கிளப் உரிமையாளர் உள்பட இருவர் கைது!

நடிகை சோனாலி போகட் மரணம்- கிளப் உரிமையாளர் உள்பட இருவர் கைது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42), தனது அலுவலக உதவியாளர்களுடன் கோவா சென்றிருந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சோனாலி போகட் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கோவா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வடக்கு கோவா அஞ்சனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த விருந்தில் போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக உதவியாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே சோனாலியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங்கை கோவா போலீசார் கைது செய்தன...
வசூலில் முன்னேறும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!

வசூலில் முன்னேறும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது."திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியையும் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியையும் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும், முதல் வாரம் மட்டும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரூ.51.42 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ரூ.3.47 கோடியும், இரண்டாவது நாள் ரூ.4.61 கோடியுடன் வசூலில் முன்னேற்றம் காணும் இப்படம் தற்போது வர...
பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை!

பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப...