கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார்....
"நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தின் போது அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன், அந்தப்படம் கைவிட்ட பிறகு தொலைக்காட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிறகு படம் இயக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன்.அதன்பின் நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை ஆரம்பித்த உடன் அவருடன் பணியாற்றத் தொடங்கினேன்.அப்போதிருந்து அவருடன் பயணித்த நான் இப்போது இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.
எதுவும் இல்லாத, எந்த ஆசையும் இல்லாத, எந்தக் கவலையும் இன்றி அனைவரையும் நக்கல் செய்து கொண்டு, திமிராகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு க...
நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது, “இந்தப் படம் நான் நள்ளிரவு ஒரு மணிக்கு ஒத்துக்கொண்டேன். நான் செய்ய நினைத்ததை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார்.
எடிட்டர் நிர்மல், “இந்தப் படம் ஆரம்பிக்க காரணமாக இருந்த நெல்சன் சாருக்கு நன்றி. சிவபாலன் சார் எங்கள் டீம் என்பதால் காமெடி படம்தான் எடுப்பார் என நினைத்தேன். ஆனால், அதையும் தாண்டில் நல்ல கதையை படமாகக் கொடுத்திருக்கிறார். டிரெய்லரில் இருப்பது போலதான் ...