வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

மீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் – உறுதிப்படுத்திய ஜீவா

மீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் – உறுதிப்படுத்திய ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் அதிகமாக புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட். இந்த நிறுவனத்தின் அதிபர் சவுத்ரியின் மகன்கள் தான் நடிகர்கள் ஜீவாவும், ஜித்தன் ரமேசும். கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் இந்நிறுவனம், விரைவில் ஒரே நேரத...
விஜய் 62 – நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு

விஜய் 62 – நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி, கமலை போலவே விஜய்க்கும் அரசியல் ஆசை எழுந்தது. மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். இதனால் ‘தலைவா’ படத்துக்கு சிக்கல் எழுந்தது. அதன் பின்னர் அரசியல் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘மெர்சல் படத்தில் மத்திய அரசை குறைகூறும் வசனங்கள் இருந்ததால் தீவிர எதிர்ப்பு கிளம்பியது. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் பணக்காரராக வருகிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்து தங்கள் சுயநலனுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாக ராதா ரவியும் பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. தாய் கழகத்தில் இருந்து பிரிந்த பழ.கருப்பையா மீண்டும் தாய்க்கழகமான ராதா...
தமிழக அரசு, மோடி அரசாக ஆட்சி செய்து வருகிறது- கி.வீரமணி குற்றச்சாட்டு

தமிழக அரசு, மோடி அரசாக ஆட்சி செய்து வருகிறது- கி.வீரமணி குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட நவீன என்கவுண்டர் ஆகும். என்கவுண்டரில் தனி நபரை ஓட வைத்து சுடுவார்கள். இங்கு கூட்டத்தை கூட்டி அதில் தனி நபரை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். தமிழகத்தில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உயிருக்கு ரூ.10 லட்சம் தருகிறோம், ரூ.20 லட்சம் தருகிறோம் என்று விலை கூறுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் அவர் அரசுக்கு சாதகமான கருத்தையே கூறுவார். எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். தூத்துக்குடியில் 144 உத்தரவை விசித்திர சட்டமாக்கி விட்டனர். ...
தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா? – கிருஷ்ணகிரி பெண்ணிடம் பிரதமர் மோடி பேச்சு

தமிழகம் வந்தால் தோசை கிடைக்குமா? – கிருஷ்ணகிரி பெண்ணிடம் பிரதமர் மோடி பேச்சு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
லவச சமையல் எரிவாயு பயனாளிகள் திட்டம் (உஜ்வாலா யோஜனா) கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரேத்யக ஆப் (செயலி) மூலமும், தூர்தர்சன் மூலமும் இன்று காலை 9.30 மணிக்கு நேரடியாக கலந் துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் இந்தியாவில் பல்வேறு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் இந்திய பெண்களின் சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி செல்கிறது. ஏழை, விளிம்பு நிலை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை இந்த திட்டம் பலப்படுத்தி உள்ளது. 2014-ம் ஆண்டு வரை 13 கோடி மக்கள்தான் எரிவாயுவை இணைத்து இருந்தனர். அதில் பெரும்பாலானோர் பணக்காரர்கள். கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி புதிய இணைப்புகள் ஏழைகளின் பயனுக்காக இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார். கிருஷ...
வங்கி ஏடிஎம்-ல் அரைகுறையாக அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டு – வாடிக்கையாளர் அதிர்ச்சி

வங்கி ஏடிஎம்-ல் அரைகுறையாக அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டு – வாடிக்கையாளர் அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பாலப்பட்டியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.-ல் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இன்று காலையில் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.5 ஆயிரம் பணம் எடுத்தார். அப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 மற்றும் 500 ரூபாய் நோட்டு 1 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 5 என மொத்தம் ரூ.5 ஆயிரம் ஏ.டி.எம்.-ல் இருந்து வந்தது. இதில் 500 ரூபாய் நோட்டு மட்டும் ஒரு பக்கத்தில் ஓரமாக அச்சடிக்கப்படாமல் இருந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். சரியாக அச்சிடப்படாமல் இருந்ததால் அவர் கள்ள நோட்டாக இருக்குமோ? என சந்தேகம் அடைந்தார். இந்த பணத்தை அங்கிருந்த பொது மக்களிடம் காண்பித்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் பணத்தை மாற்றி தருமா? என கேட்டார். அதற்கு அவர்கள், பணத்தை நேராக வங்கிக்கு கொண்டு சென்று காண்பியுங்கள். அவர்கள் பணத்தை மாற்றி தருவார்கள் என ஆலோசனை கூறினார்கள். இதையடுத்து அவர், 500 ரூ...
திருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு

திருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணத்துக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா என்று தெலுங்கு மீடியாக்களில் செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் இன்னொரு செய்தியும் வந்து இருக்கிறது. சமீபகாலமாக தான் ஒப்புக்கொள்ளும் படங்களில் நெருக்கமான காட்சிகளோ, கவர்ச்சி காட்சிகளோ இல்லாத மாதிரி பார்த்துக்கொள்கிறார். கதை சொல்ல தொடங்கும்போதே இந்த 2 கட்டுப்பாடுகளையும் இயக்குனர்களிடம் விதித்து விடுகிறார் அனுஷ்கா. காரணம் திருமணம் ஆகவிருப்பது தான் என்கிறார்கள். சமந்தா திருமணத்துக்கு பின் முத்த காட்சிகளில் நடித்தது சர்ச்சையை உண்டாக்கியது. அந்த படம் திருமணத்துக்கு முன்பே ஒப்புக்கொண்டது. எனவே அதேபோன்ற சர்ச்சைக்குள் சிக்க அனுஷ்கா விரும்பவில்லை. எனவே தான் திருமணமாகும் சமயத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள்....
இளமையும், புதுமையும் இணையும் இந்தியன்-2

இளமையும், புதுமையும் இணையும் இந்தியன்-2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன் அடுத்ததாக ‌ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2' படத்தில் நடிக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். எப்போதும் ஏ.ஆர்.ரகுமானுடனேயே பயணிக்கும் ‌ஷங்கர் இந்த முறை அனிருத்துடன் இணைகிறார். இந்த படத்தில் இன்னொரு ஆச்சர்யமும் நடக்க இருக்கிறது. படத்தில் ஒரு பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதுகிறார். ஷங்கர் படத்தில் தாமரை பாடல் எழுதுவதும் இதுதான் முதல்முறை. கமல்ஹாசனுடன் இணைந்தாலும் ‘இளமையும் புதுமையும் வேண்டும்’ என்று ‌ஷங்கர் முடிவு செய்திருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் தொழில்நுட்ப கலைஞர்களை `இந்தியன்-2' வுக்காக சேர்க்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது....
இலங்கையில் மழை, வெள்ளத்துக்கு 16 பேர் பலி

இலங்கையில் மழை, வெள்ளத்துக்கு 16 பேர் பலி

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
தீவுநாடான இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.பல இடங்களில் மண் அரிப்பினால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அடுத்த 72 மணிநேரத்துக்கு தொடர்ந்து 100 முதல் 150 மில்லிமீட்டர் வரையிலான கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக அபாயகரமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 1.30 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 231 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல்போன ஒருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படை ஈடுபட்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்....
சி.பி.எஸ்.சி தேர்வில் 97.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பாதி பார்வை குறைபாடு கொண்ட மாணவி சாதனை

சி.பி.எஸ்.சி தேர்வில் 97.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பாதி பார்வை குறைபாடு கொண்ட மாணவி சாதனை

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
பீகார் மாநிலத்தை சேர்ந்த, லாவண்யா ஜா எனும் பாதி பார்வை குறைபாடு உடைய மாணவி தான் விரும்பிய  பாடத்திட்டம் பீகாரில் இல்லாத காரணத்தினால் தனது பெற்றோரை விட்டுவிட்டு டெல்லியில் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்றார். 12ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே லாவண்யா ஜா 97.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்வு முடிவுகளுக்கு பின்னர் லாவண்யா ஜா பேசியதாவது :- எனக்கு உள்ள பார்வை குறைபாடு எனது  கல்வியை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. அதை ஒரு தடையாகவும் நான்               பொருட்படுத்தவில்லை. தினமும் தேர்வுக்கு 3 மணி நேரம் படித்து எண்னை தயார் செய்துகொண்டேன். தேர்வு எழுதும் போது கூடுதல் நேரம் அனுமதி வாங்கி எழுதினேன். அடுத்ததாக கல்லூரி படிப்பி...
20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்

20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் இன்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். தனது தலைமையிலான நான்கு ஆண்டு ஆட்சி பற்றி பிரதமர் மோடி பேசியதாவது :- நாட்டின் 125 கோடி மக்களை வாழ்த்தி ஜகன்நாதரின் பூமியில் இருந்து பேசுவது எனது கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த இடம் இது. மக்களின் கனவுகள் மற்றும் அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையே என்னை தொடர்ந்து பணியாற்ற தூண்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள பலரும் ஏழ்மையில் வாழ்ந்தவர்கள். அதனால் தான் ஏழைகளின் நலனுக்கு இந்த அரசு அதிக முக்கியத்து...