வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால்

வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கையில் இருந்த ஒரு படமும் இன்னும் துவங்காததால் வருத்தத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால். தமிழில் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானவர் காஜல். தொடர்ந்து முன்னணி நடிகையாக அஜித், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி என்று ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் இப்போது அவருக்கு படங்களே இல்லை. குயின் இந்தி பட ரீமேக்காக உருவாகும் `பாரிஸ் பாரிஸ்' தமிழ் படத்தில் ஒப்பந்தமானார் காஜல் அகர்வால். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால் ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு முன்னணி ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று கட்டுப்பாடு விதித்திருந்த காஜல் அந்த கட்டுப்பாட்டை உடைத்துவிட்டார். இனி இளம் ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க இருக்கிறார். அதேபோல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் கேட்டு வருகிறார்....
நாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

நாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நித்திலன் இயக்கத்தில் விதார்த் - பாரதிராஜா - டெல்னா டேவிஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `குரங்கு பொம்மை'. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி இயக்கியிருக்கும் குறும்படம் நாடகமேடை. சமூகத்தில் மனிதம் மீது மனிதன் கொண்டுள்ள மனிதாபிமானத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியிருக்கும் இந்த குறும்படத்தை கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் தயாரித்திருப்பதடன், அவர்களின் ஊர்நாடு திரைக்களம் மூலம் வெளியிட்டுள்ளார். இது அவரின் தயாரிப்பில் வெளிவரும் ஆறாவது குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு தவிர்த்து படத்தில் கலை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். மனிதனின் உதவும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற கதைக்களம் கொண்ட இந்த குறும்படத்தின் போஸ்டரை தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் ...
சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?

சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாமி 2 படத்துக்காக திருநெல்வேலியின் முக்கிய பகுதிகள் காரைக்குடியில் செட் போட்டு படம் பிடிக்கப்படுகிறது. சாமி படத்தின் தொடர்ச்சியாக சாமி-2 படம் உருவாகி வருகிறது. சாமி படத்தின் தொடக்க பாடலான திருநெல்வேலி அல்வாடா பாடல் பிரபலமான ஒன்று. இந்த பாடல் திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் நடப்பதாக இருக்கும். ஆனால் திருநெல்வேலியில் எடுக்கப்படவில்லை. உண்மையில் காரைக்குடியில் செட் போட்டுதான் படம் பிடித்தார்கள். இப்போது இரண்டாம் பாகத்துக்கும் அதே காரைக்குடியில் அதே திருநெல்வேலி பகுதிகளை செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். ’டர்ர்ர்ரனக்கா...டர்ர்ர்ரனக்கா...’ என்று தொடங்கும் பாடல் முந்தைய பாக பாடலை விட பெரிய ஹிட் அடிக்கும் என்கிறது படக்குழு.   சாமி-2 படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த திரிஷா தவிர அனைவருமே நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷும், சூரியும் புது வரவுகள். த்ரிஷா நடிப்பார் என்று நம்பிக்கை தெரிவ...
டெல்லியில் ராகுல், சோனியாவை சந்தித்தார் குமாரசாமி – மந்திரிசபை குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் ராகுல், சோனியாவை சந்தித்தார் குமாரசாமி – மந்திரிசபை குறித்து தீவிர ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மந்திரிசபை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து குமாரசாமி விவாதித்தார். அப்போது, எந்தெந்த துறைகளை காங்கிரசுக்கு ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 40 நிமிட சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த குமாரசாமி, “கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் மந்திரி சபை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என தெரிவித்தார். நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்....
சினிமா இசையமைப்பாளர் சங்க தலைவரானார் தினா..!

சினிமா இசையமைப்பாளர் சங்க தலைவரானார் தினா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம், அதன்படி நேற்று சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடை பெற்றது தலைவர் பதவிக்கு கல்யாண சுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர். அதில் அதிக வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் தினா தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.. செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி  -P G வெங்கடேஷ் இருவரும் போட்டிதிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.. குருநாதன்-  ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்.. உப தலைவர்களாக  மகேஷ், பாலேஷ், கோபிநாத்சேட், வீரராகவன் இணைசெயலாளர்களாக P.செல்வராஜ் P.v.ரமணன், R.செல்வராஜ் P.பாஸ்கர், ஜோனாபக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.. அதே நேரத்தில் சினி மியூசிசியன்ஸ் யூனியனின் அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலில் டிரஸ்டிக்கு போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்பாளர் S.A.ராஜ்கு...
இனிமேல் எனக்கு கட்-அவுட் வேண்டாம் – எழுமீன் விழாவில்  சிம்பு உருக்கம்

இனிமேல் எனக்கு கட்-அவுட் வேண்டாம் – எழுமீன் விழாவில் சிம்பு உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பே...
செயல் விமர்சனம்

செயல் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  செயல் விமர்சனம் நீதி நேர்மை நியாயம் பேசும் அம்மாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிற மகன்தான் கதைநாயகன். மார்க்கெட்டில் கண்ணுக்கு நேராய் நடக்கிற அநியாயத்தை அவன் யார் என்றே தெரிந்து கொள்ளாமல் தட்டிக்கேட்கிறான் ஹீரோ. அடிவாங்கியவன் மார்க்கெட்டில் பெரிய ரவுடியாக வலம் வருபவன். அடிவாங்கிய ரவுடிக்கு தான் அடிவாங்கிய அதே இடத்தில் ஹீரோவை அடித்தால்தான் மீண்டும் அந்த மார்க்கெட் கிடைக்கும் என்பதால் ஹீரோவை அடிக்க திட்டமிடுகிறான். கடைசியில் ஹீரோவை ரவுடி அடித்தானா இல்லையா என்பதுதான் ‘செயல்’ படத்தின் கதை. ஏதோ சாதாரண ஒரு சம்பவம் போல இருந்தாலும் ஒரு புதுமுகம் ராஜன் தேஜேஸ்வருக்கு இயக்குனர் ரவி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். இன்றைக்கு ஹீரோக்களாக இருக்கிற விஜய், சூர்யா போன்றவர்களின் முதல்படத்தில் இருந்த வேகத்தை தன் முதல் படத்திலும் காட்டுகிறார் புதுமுகம் ராஜன். நடிப்பு, ஆக்ஷன், நக்கல் என கலந்து கட...
காவிரி பிரச்சனை- கமல்ஹாசனின் ஆலோசனை கூட்டம்

காவிரி பிரச்சனை- கமல்ஹாசனின் ஆலோசனை கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டத்துக்கு பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இக்கூட்டம் கட்சிகளையும், இயக்கங்களையும் கடந்து காவிரி நீர் குறித்த நேர்மையான அக்கறையும், உண்மையான உணர்வும், தெளிவான திட்டங்களும் கொண்டுள்ள விவசாயிகள், வல்லுனர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கான ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்திடும் நோக்கத்தில் கூட்டப்படுகிறது என்றுதெரிவித்தார். “நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை தி.நகரில் உள்ள ஓட்டலில் நடந்தது. இதில் கமல்ஹாசன், பா.ம.கா. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வி...
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி

விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வையம் மீடியாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எழுமின்’. சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெறும் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடி இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் வருகிற மே 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்த டிரைலரை நடிகர் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிடுகின்றனர்....
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்

வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை பொட்டு படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது....