என்ஜினீயரிங் மவுசு குறைந்ததால் கலைக்கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்
பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து உயர் படிப்பிற்காக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆன்லைன் மூலமாக கல்லூரி களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
என்ஜினீயரிங் படிப்பிற்கு கடந்த சில வருடங்களாக மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லை. பி.இ., பி.டெக் முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் அலைந்து திரிகிறார்கள்.
உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டதால் பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் படிப்படியாக குறைந்து விட்டது.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த ஆண்டு மூடப்படுகிறது.
பல லட்சம் செலவு செய்து 4 ஆண்டுகள் பொறியியல் படித்து முடித்தாலும் அதற்கான வேலையோ, ஊதியமோ கிடைக்காததால் பொறியியல் படிப்பிற்கு பதிலாக கலை-அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் நாடிச் செல்கிற...









