வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்

ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இந்த அளவுக்கு பாராட்டுகளை பெற்றது கிடையாது. கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் எஸ் எஸ் ராஜமவுலி. இப்போது தான் இயக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜமவுலி அடுத்து ஜூனியர் என்.டிஆரையும், ராம்சரணையும் இணைத்து வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். கடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்போது இதுகுறித்து பேசியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். எனவே விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எ...
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம் – 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம் – 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இன்று பிளஸ்...
காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது. அதன்படி செயல் திட்ட அறிக்கை நகல்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டன. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், காவிரி வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுச்சேர...
தயாரிப்பாளர் கில்டு சங்கத் தேர்தல்   ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது..!   

தயாரிப்பாளர் கில்டு சங்கத் தேர்தல்  ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது..!   

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது    தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஜூன் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையரும்,சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதியுமான கே.என்.பாஷா கூறியதாவது,.. தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக, சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த 7 ம் தேதி அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜூன் 10 ம் தேதி தேர்தலை நடத்துவது எனவும் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது எனவும், தேர்தலை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடத்துவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் 21 ம் தேதி முதல் 25 ம் தேதிக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். 28 ம் தேதி மாலை 4 மணிக்குள் வே...
நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’

நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்...
பட வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனுக்கு விற்கப்பட்ட “கடைக்குட்டி சிங்கம்”.. !

பட வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனுக்கு விற்கப்பட்ட “கடைக்குட்டி சிங்கம்”.. !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்”. விவசாயியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் கார்த்தி, அதைப் பெருமையாகச் சொல்லும் விதத்தில் தன்னுடைய புல்லட்டின் முன்னால் ‘விவசாயி’ என எழுதி வைத்துள்ளார். ‘வனமகன்’ சயீஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரியா பவானிசங்கர் கார்த்தியின் மாமா பெண்ணாக நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமை, அமேஸான் பிரைம் வீடியோவுக்கு விற்கப்பட்டுள்ளது. படம் ரிலீஸான பிறகு சில மாதங்கள் கழித்து அமேஸான் பிரைம் வீடியோவில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். படம் ரிலீஸுக்கு முன்பே அமேஸானுக்கு விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக...
மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்

மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் லால் கடைசியாக தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ஒரு முக்கிய பிரபலம் இப்படத்தில் இணைந்திருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரி...
டி.ராஜேந்தர் புகாருக்கு ஆதாரம் எங்கே? – விஷால்

டி.ராஜேந்தர் புகாருக்கு ஆதாரம் எங்கே? – விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
என் மீது எதிரணியினர் சுமத்தியுள்ள குற்றசாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால். நேற்று பாரதிராஜா தலைமையில் டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் கூடி பேசினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. எல்லாக் கணக்குகளும் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பைரசி இணையதளங்களை வேரோடு அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். வார்த்தைகளை விட செயல் மூலம் பேசுவதே ச...