வியாழக்கிழமை, ஜூலை 2
Shadow

Author: Kodanki

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது..!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க முடிவு செய்த மத்திய அரசு அதற்கான அனுமதியை ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வழங்கியது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக நடந்த 175 நாள் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கைவிட்டனர். இந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கூறியிர...
மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!

மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மாரி-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சாய்பல்லவி..!
ஐபிஎல் 2018 – 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

ஐபிஎல் 2018 – 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, கொல்கத்தா அணி 211 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் ந்ரேன் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். மும்பை அணி...
அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா

அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் உள்ள நாயகிகள் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பல நாயகிகள் தங்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். ‘நர்மதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நந்திதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டருமான கீதா ராஜ்புத் கூறியதாவது:- “தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லும் படம், இது. இதில், கதையின் நாயகி நந்திதா ஸ்வேதா 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதை நாயகனாக விஜய் வசந்த் நடிக்கிறார். கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்துக்காக, நாகர்கோவிலில் இயற்கை எழிலுடன் கூடிய திறந்தவெளி அரங்கம், பி...
இந்த வாரம் கடும் போட்டியில் 4 படங்கள்

இந்த வாரம் கடும் போட்டியில் 4 படங்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்கள் புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. இதனால் ஏராளமான படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது முன்பதிவு பதிவு அடிப்படையில் படங்கள் திரைக்கு வருகின்றன. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் தனி குழு அமைக்கப்பட்டு அவர்களுடைய அங்கீகாரத்துடன் வாரந்தோறும் 3 அல்லது 4 படங்கள் திரைக்கு வருகின்றன. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ‘மெர்குரி’, ‘முந்தல்’, ‘தியா’, ‘பாடம்’, ‘பக்கா’, ‘அலைபேசி’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. வருகிற 11-ந்தேதி முக்கிய படங்கள் திரைக்கு வருகின்றன. விஷால்-சமந்தா நடித்துள்ள ‘இரும்புத்திரை’, அரவிந்தசாமி - அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, அருள்நிதி - மகிமா நம்பியார் நடித்திருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, இவை தவிர கீர்த்தி சுரேஷ், சமந்தா,...
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அ...
நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் – ரஜினிகாந்த்

நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது, இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த வெற்றி விழாவுக்கு வந்த கலைஞர் அன்று பேசினார். அவரது அந்த குரலை மறக்க முடியாது. அவரது குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக ஒலித்த அந்த குரல், மீண்டும் ஒலிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். விரைவில் அவரது குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன். சிவாஜிக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக போகவில்லை. புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்க...
காதல் மோதல் த்ரில்லர் கலந்த எம்பிரான்..!

காதல் மோதல் த்ரில்லர் கலந்த எம்பிரான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்! இப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.  யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த 'பிரசன் பாலா' இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து, நடனம் தீனா மற்றும் விஜி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நட...
டிராபிக் ராமசாமி பட டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.

டிராபிக் ராமசாமி பட டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.  அவர்கள் இன்று வெளியிட்டார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள்  கூறும்போது, "டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர். தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில், இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும், தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில்  டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன், தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று ...