புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ஜி.வி.பிரகாஷ் படத்தில் மேலும் ஒரு நாயகி

ஜி.வி.பிரகாஷ் படத்தில் மேலும் ஒரு நாயகி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘செம’, ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் தயாராகிறது. இதில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமிராதஸ்தர் நடிக்கிறார். சோனியா அகர்வாலும் இந்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது இன்னொரு நாயகியாக ‘சூதுகவ்வும்’, ‘பிட்சா 2’, ‘ரம்’ ஆகிய படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி இணைந்திருக்கிறார்....
நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு

நீட் தேர்வு எழுதிய மகனுக்கு துணையாக சென்று கேரளாவில் இறந்த கிருஷ்ணசாமி உடல் ஒப்படைப்பு

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் தந்தை கிருஷ்ணசாமி சென்றிருந்தார். இன்று காலை மகன்  தேர்வு மையத்துக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பக்கத்து அறையில் இருந்த நபர் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் கிருஷ்ணசாமியின் உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பேரில் எர்ணாகுளம் சிட்டி ஆஸ்பத்திரியில் வ...
காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி – கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர்

காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி – கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
காதல் கந்தாஸ் ஒரு நம்பிக்கை துரோகி கொந்தளிக்கும் ‘யாளி’ பட பெண் இயக்குனர் அக்ஷயா ‘கலாப காதலன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆன அக்ஷயா அந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். திறமையான நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவில் இருந்தே ஒதுங்கியிருந்தார். நல்ல பாடகி, நடிகை என பன்முக திறமையோடு இருந்த அக்ஷயா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘யாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். தான் இயக்குனர் ஆவதற்கு முன்பு பல தடைகளை தாண்டவேண்டியிருந்தது பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வர முடிந்தது என்று கூறிய பெண் இயக்குனர் அக்ஷயா ‘கோடங்கி’ இணையத்தில் தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்... ஓவர் டூ அக்ஷயா.... நான் நடிகையாக அறிமுகம் ஆனபோது நான் யார் என்றே தெரியாமல் என்னையும் என...
சூர்யா படத்தில் என் திறமை வெளிப்படும் – ரகுல் பிரீத்திசிங்

சூர்யா படத்தில் என் திறமை வெளிப்படும் – ரகுல் பிரீத்திசிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடிக்கும் படம் ‘என்ஜிகே’. தற்போது, இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. செல்வராகவன் இந்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரகுல் பிரீத்திசிங் தெலுங்கில் இருந்து மீண்டும் தமிழுக்கு நடிக்க வந்த பிறகு முதலில் கார்த்தியுடன் நடித்தார். இதில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் பாத்திரம் குறித்து ரகுல் பிரீத்திசிங் கூறுகிறார்... “நான் தென் இந்திய படங்களில் மட்டுமல்ல. இந்தி படங்களிலும் நடித்து விட்டேன். ஆனால் இந்த ‘என்ஜிகே’ படத்தில் மிகவும் அருமையான வேடம் கிடைத்திருக்கிறது. இது நான் இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடம். எனது நடிப்புத்திறமை நன்றாக வெளிப்படும் பாத்திரத்தை செல்வராகவன் எனக்கு கொடுத்து இருக்கிறார். நான் கன்னட சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன். அப்போது, தமிழில் செல்வராகவன் இயக...
காலா படவிழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்

காலா படவிழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’ . தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இவ்விழாவில் படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். தனுசின் ‘வுண்டர்பார் நிறுவனம், ‘காலா’ படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியையும் நேரடியாக இணையதளங்களில் வெளியிடுகிறது. இன்றைய தினத்தில் தனது கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமாகுரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானாபடேகர், சமுத்திரக்க...
1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ

1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேன்ட் சேவையை விரைவில் துவங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 2016 முதல் சோதனை துவங்கிய நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகாரப்பூர்வ சோதனைகள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் துவங்கப்பட்டது. சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ திட்டங்களின் கீழ் இலவச டேடடா வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் டூ ஹோம் சேவைகள் சென்னை, ஆமதாபாத், ஜாம்நகர், மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற நகரங்களில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ஃப...
ரஜினி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்

ரஜினி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டமாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னைக்கு உறுப்பினர்களை வரவழைத்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினி கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ளது:- ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கட்சி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்த ராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய 6 ப...
சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வருகிறதே ஏன்?

சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வருகிறதே ஏன்?

HOME SLIDER, NEWS, செய்திகள்
அசுப கிரஹங்களில் முதன்மையானது சனி என்பதால் இந்த பயம் வருகிறது. சனி என்றாலே தீய கோள், தீய பலனை மட்டுமே தரும் என்பது போன்ற கருத்து நிலவுகிறது. சோதனைகளை தந்து நமது முன்னேற்றத்திற்கு சனி தடையாக இருப்பார் என்று எண்ணுவதால் சனி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு, ஏன் காதால் கேட்பதற்குக் கூட அச்சம் கொள்கிறோம். உண்மையைச் சொன்னால் சனியின் மீதான இந்த பயம் அர்த்தமற்றது. சனி என்ற கோள் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் ‘வேகத்தடை‘ போன்றது. வேகமாக சாலையில் பயணிக்கும் ஒருவருக்கு வேகத்தடையைக் கண்டதும் ஒருவித எரிச்சல் தோன்றும். நமது வேகத்தினை இது குறைத்து விட்டது என்று வருத்தம் கொள்வோம். ஆனால், நமது நலன் கருதியே அது அமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். விபத்து ஏற்படாமல் நம் உயிரைக் காக்கும் உயரிய பணியை அந்த வேகத்தடை செய்கிறது. வேகத்தடையைக் கண்டதும் நிதானித்து சென்றோமேயானால் நமது உயிர...
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்கிறதா திருப்பதி ஏழுமலையான் கோவில்?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்கிறதா திருப்பதி ஏழுமலையான் கோவில்?

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாட்டின் பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான செயல் அலுவலருக்கு, மத்திய தொல்லியியல் துறை அதிகாரிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். திருமலையில் உள்ள பழங்கால கட்டடங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கட்டடங்களை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து,  மாற்றங்கள் செய்வதாக புகார் வந்துள்ளதாகவும்,  அந்த கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் வழங்கும் விலை மதிப்புமிக்க காணிக்கைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை என்றும்,  பழங்காலத்தில் மன்னர்கள், பேரரசர்கள் வழங்கிய ஆபரணங்கள் கூட பாதுகாப்பாக இல்லை என, மத்திய தொல்லியியல் துறைக்கு புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருமலை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோயில் கட்டடங்களின் விவரங்களை வழங்கும்படி, தொல்லியியல் துறை அதிகாரிகள் தேவஸ்தானத்தை வலியுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து, கோவிலை மத்திய அர...
டைமண்ட் லீக் தடகளம்: புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளம்: புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார். டோஹாவில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகளில் இந்திய இளம் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்து 4-வது இடத்தை பெற்றார். நீரஜ் சோப்ரா, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில் 87.43 தூரம் எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற ஜேக்கப்பை பின்னுக்கு தள்ளி 4-வது இடம் பிடித்தார். ஏற்கனவே நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 2016-ல் புதிய சாதனையோடு ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மேலும் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 86.47 மீ தூரம் ஈட்டி எறிந்து, தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் டைமண்ட் லீக் போட்டியில் உலக சாம்பியன் வெட்டர், ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோலர், ஆண்ரிஸ் ஹாப்மேன் ஆகிய ஜாம்பவ...