புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, தொடர்ந்து வட மாநிலங்களில் பல பகுதிகளில் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர் மீதான சட்டம் மற்றும் தண்டனைகளை மக்கள் கவனிக்கத்  தொடங்கியுள்ளனர்.  மேலும், இது போன்று பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை யாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுக்கு எதிராகப் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், `12 வயதுக்குட...
முற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’

முற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’

MOVIES, திரைப்படங்கள்
முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் 'சந்தோஷத்தில் கலவரம்' என்கிற படம் உருவாகி வருகிறது.   இப்படத்தைக் கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர்.  அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும்  தரப்படும்  மரியாதையை வைத்து  தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ' ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி  வி.சி. தயாரிக்கிறார் . "ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும்  இடை...
பெண் பத்திரிகையாளர்களை தப்பாக பேசிய எஸ்.வி.சேகர் வீட்டில் கல் வீச்சு!

பெண் பத்திரிகையாளர்களை தப்பாக பேசிய எஸ்.வி.சேகர் வீட்டில் கல் வீச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுனருடனான பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து வேறு ஒரு நபர் பதிந்திருந்த கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிபடுத்தும் விதத்திலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஜநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுகிற பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை அள்ளி வீசிய எஸ்.வி சேகருக்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சென்னையிலுள்ள எஸ்.வி சேகர் வீட்டை முற்றுகையிட்டு அவரின் இழி செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள். தொடர்ந்து எஸ்.வி சேகர் வீட்டின் மேல் கல் எரிந்தும் தங்களது எதிர்ப்பினை பத்திரிகையாள...
ஸ்டன்ட் யூனியன் விழாவில்  விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்!

ஸ்டன்ட் யூனியன் விழாவில் விஜய்சேதுபதி ரத்ததானம் செய்தார்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று  ஸ்டன்ட் யூனியன்  51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்கினார். இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது..ரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார். கண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான  டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் சி...
அஜித் பிறந்த நாளன்று யுவன் ரிலீஸ் செய்கிறார் ‘பில்லா பாண்டி’ சிங்கிள்

அஜித் பிறந்த நாளன்று யுவன் ரிலீஸ் செய்கிறார் ‘பில்லா பாண்டி’ சிங்கிள்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் "பில்லாபாண்டி " திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக " எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் " என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது . தொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் - ராஜா முகமது , ஒளிப்பதிவு - ஜீவன் , இசை - இளையவன் , எழுத்து - எம் .எம்.எஸ். மூர்த்தி , இயக்கம் - ராஜ் சேதுபதி .  இத்திரைப்படத்தை J.K.Film Production...
பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டார் கவர்னர் புரோஹித்!

பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டார் கவர்னர் புரோஹித்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டியதற்காக வருத்தத்துடன் மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அருப்புகோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியர் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்து அவர் கைது செயப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ் பவனில்  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் நிறைவு பகுதியில் பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள ஆளுநர்,  “பெண் பத்திரிக்கையாளாரின் கேட்ட கேள்வி நல்ல கேள்வியாக இருந்ததால் அதனை பாராட்டும் விதமாக கன்னத்தை தட்டினேன், எனது பேத்தியாக நினைத்து தான் கன்னத்தை தட்டினேன்” எனவும்  நானும் 40 வருடங்கள...
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் ஆனது!

சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் ஆனது!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
 பல தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் சினிமா சங்கங்கள் தொடர்பாக நேற்று நடை பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டியதை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்தல், கேளிக்கை வரி நீக்கம், டிக்கெட் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங், தின்பண்டங்களின் விலை குறைப்பு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைத்துறையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 47 நாட்களாக நடைபெற்று வந்தது. முன்னதாக நடைபெற்ற  பேச்சுவார்த்தைகளில்,  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடனும், திரையரங்கு உரிமையாளர்களுடனும் கியூப் நிறுவனம் எந்தவித உடன்பாட்டுக்கும் வரவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே தீர்வு காண  முடியும் எனவும் கூறப்பட்டது. அதை தொடர்ந்து கோரிக்கைகளுக்கு  தீர்வு ...
பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “

பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “

MOVIES, திரைப்படங்கள்
அன்னை  திரைக்களம் சார்பில்  மே.கோ.உலகேசு குமார்,  மேடூர் பா.விஜய ராகவன்,  சா.பா.கார்த்திராம் இணைந்து  தயாரிக்க SFF  TV   வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்தி ருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -        கர்ணா இசை           -        யஜமன்யா எடிட்டிங்     -        SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள்    -        வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு      -       மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இயக்கம்  ...
மாணவிகளை பலான வேலைக்கு முயன்ற  கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது

மாணவிகளை பலான வேலைக்கு முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது

HOME SLIDER, NEWS, செய்திகள்
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அத்துடன் மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் உயர் மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு, கணிதத் துறை உதவிப் பேராசிரியையாக ஆத்திபட்டியைச் சேர்ந்த நிர்மலாதேவி (46) பணிபுரிந்து வருகிறார். இவர், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், கருத்தரங்குகள் முதலியவற்றுக்கு மாணவ, மாணவிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கமாம். இந்நிலையில், நிர்மலாதேவி, கடந்த மாதம் அவரது துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, பல்கலைக்கழக அதிகாரிகள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றினால...