செவ்வாய்க்கிழமை, ஜூன் 30
Shadow

Author: Kodanki

நரகாசூரன் படத்தில் லாபம் கேட்டேனா? – கெளதம் மேனன் விளக்கம்

நரகாசூரன் படத்தில் லாபம் கேட்டேனா? – கெளதம் மேனன் விளக்கம்

CINI NEWS, சினி நிகழ்வுகள்
துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், தற்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில், அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் இயக்குநர் கௌதம் மேனனும் ஒருவர். இந்நிலையில், நரகாசூரன் திரைப்படத்தின் தயாரிப்பு விவகாரம் தொடர்பாக கார்த்திக் நரேனுக்கும், கௌதம் மேனனுக்கும் மோதல் உருவாகியுள்ளது. கார்த்திக் நரேன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை பதிவிட்ட பதிவொன்றில், “சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என பதிவிட்டார். இது கௌதம் மேனனை குறிப்பிட்டு சொன்னதுபோல் இருந்த...
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!

அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!

CINI NEWS, திரைப்படங்கள்
உச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி போன்ற நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் நடிகர்கள் நல்ல திறமையான இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது அந்த சூழல் இன்னும் மாறி விடுகிறது. இயக்குனர் கண்ணனனுடன் அதர்வா இணையும் பூமராங் படம் அப்படி ஒரு விஷயம் தான்.    இந்த படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறார். அதை பற்றி இயக்குனர் கண்ணன் கொஞ்சம் விளக்கமாக கூறும்போது, "இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே விருது பெற்ற மேக்...
கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரம்: காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு!

கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரம்: காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
 கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், பெண் அதிகாரியைத் மிரட்டியதாக திமுக எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உட்பட 10 பேர் மீது பெண்கள் வன்கொடுமைச்  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 114 கூட்டுறவுச் சங்கங்களுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 26-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனை செய்து அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை 5 மணிக்கு ஒட்டியிருக்க வேண்டும் எனவும்  ஆனால், ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் பல கூட்டுறவுச் சங்கங்களில் வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படவில்லை எனவும் கூறி திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூறி வந்தனர். அதனையடுத்து வேட்பாளர் பட்டியல் ஒட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்ட தேர்தலில் முறைகேடு ந...
காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி. தற்கொலை பேச்சு: கமல் கடுப்பு!

காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி. தற்கொலை பேச்சு: கமல் கடுப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன், தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்யுமாறு கூறுவதாகவும் காவிரி ...
தினகரன் தரப்பு குக்கர் சின்னத்தைப் பயன்படுத்த தடை!- சுப்ரீம் கோர்ட் அதிரடி

தினகரன் தரப்பு குக்கர் சின்னத்தைப் பயன்படுத்த தடை!- சுப்ரீம் கோர்ட் அதிரடி

HOME SLIDER, NEWS, செய்திகள்
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்கி உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சிப் பெயர், சின்னம் ஆகியவை எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு கிடைத்த நிலையில், தங்களுக்குக் குக்கர் சின்னமும், வேறு பெயரும் வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 9ஆம் தேதி குக்கர் சின்னத்தையும், விரும்பும் பெயர்களில் ஒன்றையும் தினகரன் தரப்புக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. மேலும் கடந்த 16ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தினகரன் ஆரம்பித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி-பன்னீர் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவில், கட்சி தொடங்குவதற்கு முன்னரே தினகரன் தரப்புக்கு சின்னம் ஒதுக்க ...
ஏனிந்த கல்யாணம்? – சசிகலா புஷ்பா-வின் புது கணவர் ராமசாமி விளக்கம்

ஏனிந்த கல்யாணம்? – சசிகலா புஷ்பா-வின் புது கணவர் ராமசாமி விளக்கம்

NEWS, செய்திகள்
அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நேற்று முன்தினம் டெல்லியில் 2-வது திருமணம் நடைபெற்றது. அவர் எம்.பி.க்களுக்கு சட்ட ஆலோசகரான பி.ராமசாமியை திருமணம் செய்து கொண்டார். ராமசாமிக்கு, சசிகலா புஷ்பா 3-வது மனைவி என்ற தகவலை தர்போது தெரிவித்தார்.. அந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ‘எம்.பி.சசிகலா புஷ்பாவை 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டது ஏன்?’ என்பது குறித்து அவரது கணவரும் சட்ட ஆலோசகருமான ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ராமசாமி, “ என்னுடைய முதல் மனைவியும், மகனும் விபத்தில் இறந்து விட்டனர். நானும், என் மகளும் உயிர் பிழைத்தோம். இதனால் என் மகளை கவனிப்பதற்காக சத்யப்பிரியாவை 2-வதாக திருமணம் செய்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து விட்டார். சத்யப்பிரியா என் மகளை கொடுமைப்படுத்தினார். அவருடைய தம்பி என் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக ட...
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி

டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நடன இயக்குனர் பாரதி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு  நடனமாடி இருக்கிறார். இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ ஓவியாவ விட்டா யாரு “ என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து வீரதேவன், பவித்ரன் இயக்கத்தில் தாராவி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நேத்ரா, பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா, தம்பிராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “ உலகம் விலைக்கு வருது “ மற்றும் எழில், லிங்குசாமி, பூபதிபாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர்செல்வம் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குனர் கிரண், இயக்குனர் பரத் ஆகியோரின் படங்களிலும் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள “ நேத்ரா “ படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற...
சசிக்லா உடல் நலக்குறைவு: சொத்து பிரச்னை காரணமா?

சசிக்லா உடல் நலக்குறைவு: சொத்து பிரச்னை காரணமா?

NEWS, செய்திகள்
கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோலில் வெளியே வந்திருக்கும் சசிகலாவிற்கு திடீரென் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த சசிகலாவின் கணவர் ம.நடராஜன் மார்ச் 20-ந் தேதி காலமானார். அவரின் உடல் பெசண்ட்நகரில் உள்ள அவரின் வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது. இந்நிலையில் தஞ்சையில் தங்கியிருக்கும் சசிகலாவிற்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சச...
கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 12-ல் தேர்தல்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை!

கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 12-ல் தேர்தல்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகஷ் ராவத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், வரும் மே மாதத்துடன் அம்மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் அங்கு சட்டசபைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இன்று டெல்லியில் நடந்த தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், வரும் மே மாதம் 12-ம் தேதி கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடைபெற்று 15-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், `கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும். அதனால் அரசு எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தக் கூ...