முப்பரிமாணம் விமர்சனம்
நாயகன் சாந்தனுவும், நாயகி சிருஷ்டி டாங்கேவும் பொள்ளாச்சியில் சிறு வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். சாந்தனுவின் அப்பா ஒரு போலீஸ்காரர். நாயகியின் அண்ணன் ரவி பிரகாஷ் ஒரு சாதி வெறியர். ஒருமுறை தனது சாதிக்காரப் பொண்ணு சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், காதல் ஜோடியை கொலை செய்கிறார். இதனால், சாந்தனுவின் அப்பா அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
இதனால், சாந்தனுவின் குடும்பத்துக்கும் சிருஷ்டியின் குடும்பத்துக்கும் பகை ஏற்படுகிறது. சிருஷ்டியின் அப்பா தனது அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு சாந்தனுவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொடுக்கிறார். ரவி பிரகாஷையும் வெளியே கொண்டு வருகிறார்.
தனியாக பிரிந்த நாயகனும், நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வேறு ஊருக்கு மாற்றலாகி சென்ற சாந்தனுவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கே வருகிறது. ...
