சினிமாகாரர்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்... காவி ஒரு கலர் இதை எப்படி ஒரு அமைப்பு சொந்தம் கொண்டாட முடியும்
பதான் சர்ச்சையில் பாஜகவுக்கு பாடம் எடுத்த துரை வைகோ
https://www.youtube.com/watch?v=tTE8VOuIrWU
அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிறிஸ்டி'. இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை மனு ஆண்டனி கவனிக்க, சுஜித் ராகவ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உர...
Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் நேற்று (டிசம்பர் 14, 2022 ) எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.
ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஈரம் படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது. Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்கும் “சப்தம்” படத்தை திரைக்க...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள் மூலம் பெறப்படும் சொத்துவரி மாநகராட்சிக்கு முக்கிய வருவாயாக உள்ளது.
வருடத்திற்கு 2 முறை அரையாண்டு வீதம் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும். தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது.
முதல் அரையாண்டில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் இல்லாமல் கட்ட இன்று (15-ந் தேதி) வரை மாநகராட்சி அவகாசம் கொடுத்து இருந்தது. நாளையில் இருந்து செலுத்த வேண்டிய தொகைக்கு அபராதம் சேர்த்து வசூலிக்கப்படும்.
இதற்கிடையில் பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக சொத்துவரி செலுத்து வருகின்றனர்.
ஆனாலும் சிலர் இறுதி நாளான இன்று சொத்துவரி செலுத்தினர். மாநகராட்சி சொத்துவரி மையங்களிலும், வங்கிகள் மற்றும் இணைய தளம் வழியாகயும் செலுத்தினார்கள்.
அபராதத்தை தவிர்க்கும் வகையில் ச...
தி லிப் பாம் கம்பெனி தன்னுடைய முதல் பிறந்தநாளை கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடரான நயன்தாரா மற்றும் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
வீகன் லிப் பாம்ஸ், தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட டிண்ட்ஸ், கர்ப்பமாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைப் பெற்றுள்ள பெண்களுக்கு ஏற்ற வகையிலான லிப் பாம்ஸ், குழந்தைகளுக்கான பாதுகாப்பான லிப் பாம்ஸ், மியூட்டோஜெனிக் இல்லாத லிப் பாம்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இல்லாதவை, பேக்கேஜிங்கில் சிறந்தவை, மாணவர்களுக்கு ஏற்ற வகையிலான மினி வெர்ஷன்ஸ், சன் புரொடக்ஷன் உள்ள லிப் பாம்ஸ், ஆண்டி ஏஜிங் வகையிலானது, கேட்ஜெட் அதிகம் உபயோகிப்பவர்களுக்கான லைஃப்ஸ்டைல் லிப் பாம்ஸ் என பல உறுதிகளை 'தி லிப் பாம் கம்பெனி' ஆரம்பித்த நாளில் உறுதி கொடுத்தது.
இந்த உறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் லிப் பாம் கம்பெனி தற்போது எவர் ஒருவர் பாதுகாப்பான மற்றும் தரமான லிப் பாம் வேண்டும் எனத் தேட...
விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் #லத்தி.
வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின் டிரைலரை வெளியிட்டார்.
நடிகர் விஷால் பேசியதாவது,
ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல,
வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவு தான்.. என்று பேச்சை ஆரம்பித்தார்.
#லத்தி திரைப்படம் நான்கு மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது வழக்கமாக நடக்கும் விஷயம்.
சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் ...
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'எனும் வலைதளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியிருக்கிறார்.
ஒரு கிரைம் திரில்லர் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு, பின்னணியிசை ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
தொடரில் இடம்பெறும் திருப்பங்களுக்கும், எதிர்பாராத சுவாரசியமான திடீர் திருப்பங்களுக்கும் உற்சாகப்படுத்தும் வகையில் பின்னணியிசை அமைந்திருக்கிறது.
ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் இசையமைப்பாளரான சைமன் கிங், இந்த தொடரைப் பார்வையாளர்களிடத்தில் பிரத்யேகமாக அடையாளப்படுத்தும் வகையில் முகப்பு பாடலை அமைத்து பெருமைப்படுத்தி இருக்...
Romeo Pictures தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்".
“பாபா பிளாக் ஷீப்" படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.
பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்" படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்...
இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
300-க்கு மேற்பட்ட வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.
கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்த...
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்".
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது....