வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

வைரலாகும் வெற்றிமாறன் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்!

வைரலாகும் வெற்றிமாறன் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பேட்டைக்காளி. இவர் இதற்குமுன்பு தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணணுக்கு ஜே படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் கலையரசன், ஆண்டனி, கிஷோர், ஷீலா ராஜ்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டைக்காளி படத்தில் பாண்டியாக கலையரசனும், செல்வசேகரனாக வேல ராமமூர்த்தியும், தேன்மொழியாக ஷீலா ராஜ்குமாரும், முத்தையாவாக கிஷோரும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
வைரலாகும் பத்து தல படப்பிடிப்பு தளத்தில் சிம்புவின் புகைபடம்!

வைரலாகும் பத்து தல படப்பிடிப்பு தளத்தில் சிம்புவின் புகைபடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும்...
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை. இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தி தலைவர்களாக உருவான ஜி-23 தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு பதிலாக புதிதாக ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன் பேரில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நாடு முழுவதும் சென்று காங்கிரசாரிடம் ஆதரவு திரட்டினார்கள். இதைத்...
தொடர்ந்து லீக் ஆகும் விஜய் பட காட்சிகள்!

தொடர்ந்து லீக் ஆகும் விஜய் பட காட்சிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதாக கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம். இந்த பாடலை தான் தீபாவளியன்று படக்குழு...
25ந் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது!

25ந் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ந் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். கிரகண உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய ...
டி20 உலகக் கோப்பை- இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதல்!

டி20 உலகக் கோப்பை- இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. நேற்றைய முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. 2-வது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நியூலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாட முடியும் என கருதப்படுகிறது. முன்னதாக குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வ...
நயன்தாரா விவகாரம்: அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

நயன்தாரா விவகாரம்: அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்...
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம் – ரோகித் சர்மா!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம் – ரோகித் சர்மா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வரும் 23-ம் தேதி மோதுகிறது. இந்நிலையில், 16 அணிகளின் கேப்டன்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி விடுவோம். அப்போட்டியில் யார் விளையாட போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடைசி நிமிடத்தில் யாரிடமாவது நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று சொல்வதை நான் விரும்பவில்லை. காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதி. அதை எதுவும் செய்ய முடியாது. நிறைய போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்படும். எங்களது கவனம் அணியை வலுப்படுத்துவதில் உள்ளது. அதனால்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறோம். பு ம்ரா காயம் பற்றி நிபுணர்களிடம் பேசினோம். உலக கோப்பை போட்டி முக்கியம். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது...
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை உண்டாக்கிய சர்தார் பட டிரைலர்!

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை உண்டாக்கிய சர்தார் பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்தார் படக்குழு, வடபழனியில் உள்ள பிரபல மாலில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வந்த திரைப்படம் "சர்தார்". கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. நடிகர் சூர்யா வெளியிட்ட டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வரும் போது  படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழுவினர் உறுதிப்படுத்தினர். சர்தார் திரைப்படம்  தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி அன்று வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும்  திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகும் என்றும் இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்பதையும் உறுதிப்படுத்தினர். பொன்னியின் செல்வன் வெற்றிக்கு ...
இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு வாழ்த்துமடல் மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.. கவிஞரும் தன் பங்களிப்பாக ஆய...