வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

சின்னத்திரை நாயகன் சித்து சித் வெள்ளித்திரை நாயகனாக களம் இறங்குகிறார்!!

சின்னத்திரை நாயகன் சித்து சித் வெள்ளித்திரை நாயகனாக களம் இறங்குகிறார்!!

செய்திகள்
சீரியல் ரசிகர்களின் பேவரைட் நடிகரான சித்து சித்! - விரைவில் வெள்ளித்திரை ஹீரோவாக களம் இறங்குகிறார் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த நடிகர் சித்து சித் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்! - சோசியல் மீடியாவில் வைரலாகிறது சின்னத்திரை, வெள்ளித்திரை என்ற பாகுபாடு பார்க்கும் காலம் மாறி, எந்த தளமாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்துவிட்டால் அவர்களை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருப்பதால், சின்னத்திரையில் முகம் காட்டுவது என்பது மிகப்பெரிய சவலாக இருக்கிறது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஜெயிப்பது சிலர் மட்டுமே. அந்த சிலரில் ஒருவர் தான் நடிகர் சித்து சித். ‘திருமணம்’ என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது ’ராஜா ராணி 2’ தொடரில் ஹீரோவாக நடித்து வருவதோடு, தமிழ் ரசிகர்களின் ...
மின் கட்டணம் உயர்வு- ரூ.2,250 அதிகரிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!

மின் கட்டணம் உயர்வு- ரூ.2,250 அதிகரிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் வழியாகவும், தரைக்கு அடியில் கேபிள் வழியாகவும் மின்சப்ளை செய்யப்படும் பகுதிகளில் கட்டணங்கள் மாறுபடும். வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண உயர்வு விபரம் வருமாறு:- பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு கட்டணம்-ரூ.200 (ரூ.100), இணைப்பு கட்டணம்-ரூ.1000 (ரூ.500), மீட்டர் காப்பீடு-ரூ.750 (ரூ.600), வளர்ச்சி கட்டணம்-ரூ.2,800 (ரூ.1400), வைப்புத் தொகை ரூ.300 (ரூ.200), மொத்தம் ரூ.5050 (ரூ.2800) அதாவது ரூ.2 ஆயிரத்து 250 உயர்த்தப்பட்டுள்ளது. மும்முனை மின் இணைப்பு பெறுவதாக இருந்தால் ரூ.6600 செலுத்த வேண்டும். ...
சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள், தமிழக அரசியல், விளையாட்டு செய்திகள்
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 2019-2021 ஆண்டுகளில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். விழாவில் 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:- தமிழகத்தில் விளையாட்டு துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. சிலம்பம், கபடி போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த நிலையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி, சென்னையில் இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. பிப்ரவரி மாதம் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற...
நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி!

நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,957 பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு (2022) 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில் 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். இதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 35 சதவீத தேர்ச்சியாகும். சென்னையில் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரத்தில் 100 சதவீத தேர்ச்சியாக தேர்வு எழுதிய 131 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதே போல் விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மா...
பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை, மு.க.ஸ்டாலின் வாழ்க – இளையராஜா!

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை, மு.க.ஸ்டாலின் வாழ்க – இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து பாரதியாரின் நினைவு நாளையொட்டி, இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, 'நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? 'நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' தன்னை நல்லதோரு வீணையாகவும் அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகை...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் – பாக்யராஜ் வெற்றி!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் – பாக்யராஜ் வெற்றி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 ஓட்டுகள் பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பின்னர் பாக்யராஜ் கூறுகையில், வெற்றியை அளித்தவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். எழுத்தாளர் சங்க தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தீபாவளி ஸ்பெஷல்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய வாரிசு படக்குழு !

தீபாவளி ஸ்பெஷல்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய வாரிசு படக்குழு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட் என்று கமெண்ட் செய்து பதிவை வைரலாக்கி வருகின்றனர். 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
அமோக வசூல் குவிக்கும் “3” படத்தின் தெலுங்கு பதிப்பு !

அமோக வசூல் குவிக்கும் “3” படத்தின் தெலுங்கு பதிப்பு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் '3'. இந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற, 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது '3' படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு செய்துள்ளனர். அங்கு இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒரு பாடலை திரையரங்கில் இருக்கும் அனைவரும் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் திரையரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது நடித்...
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில...