வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

Author: Kodanki

வைரலாகும் யுவன் ஷங்கர் ராஜாவின் தியாகி பாய்ஸ் பாடல் !

வைரலாகும் யுவன் ஷங்கர் ராஜாவின் தியாகி பாய்ஸ் பாடல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் "தியாகி பாய்ஸ்" பாடலை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத...
சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா!

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் நடிக்க தனது சம்பளத்தை ராஷ்மிகா உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புஷ்பா படத்தில் நடிக்க ரூ.1 கோடி வாங்கிய அவர் தற்போது புஷ்பா 2-ம் பா...
சுதந்திர தின விழா- சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

சுதந்திர தின விழா- சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிஉள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் சோதனை, விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து தீவிரப்பட...
ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன்

ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் "விருமன்". முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது, முக்கியமான ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கார்த்தி சாரின் ஸ்மைல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த படத்தில், ஷங்கர் சார் உதவி இயக்குனராக இருந்தார். அவருடைய பெண் கதாநாயகியாக நடிப்பதில் வாழ்த்துகள் என்றார். இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பேசும்போது, மதுரையிலேயே நன...
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடந்த சில நாட்களாக குலசேகரம், திற்பரப்பு, பெருஞ்சாணி பேச்சிபாறை, போன்ற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணி களின் கூட்டம் அலை மோதுகிறது. இரண்டு நாள் விடுமுறை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநில மான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து ஆனந்த மாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் சிறுவர் கள் விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் நீச்சல்குளத் தில் அதிக அளவில் குளித்து பொழுதை கழித்தார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக குளிக்க காற்று நிரப்பிய கார் டியூப்புகளும் வைக்கப் பட்டு உள்ளன. பாதுகாப்பு போலீசாரும் நிறுத்தப்பட்டு உள்ளனர். தற்போது குளிப்பதற்கு ஏற்ற சீசன் தொடங்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு ஆசியாவிலே ம...
மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 95 சதவீதம் ஏரி, குளங்கள் நிரம்பின!

மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 95 சதவீதம் ஏரி, குளங்கள் நிரம்பின!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக கல்லணை கால்வாய் பகுதியில் மட்டும் 694 ஏரி, குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்கள் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு நிரம்பக்கூடிய ஏரி, குளங்களாகும். அதன்படி முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும். தற்போது அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் அந்த தண்ணீரைக் கொண்டு ஏரி, குளங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. அதன்படி கல்லணைக் கால்வாயில் உள்ள 694 ஏரி, குளங்களில் 681 ஏரி, குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன. மீதமுள்ள 13 ஏரி, குளங்கள் மட்டும் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் அந்தந்த உள்ளாட்சிக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மழைக்காலங்களில் மட்டும் நிரம்பக்கூடிய குளங்களாகும். அதாவது வடகிழக்கு பருவமழை காலங்களி...
நட்சத்திரம் நகர்கிறது  படத்தின் புதிய அப்டேட்!

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் முதல் பாடல் 'ரங்கராட்டினம்' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் பா. ரஞ்சித் போஸ்டர் ஒன்றை வ...
வைரலாகும் திருச்சிற்றம்பலம் டிரைலர்!

வைரலாகும் திருச்சிற்றம்பலம் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி, சாதாரண டெலிவரி பாயாக இருக்கும் தனுஷின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் கதைகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/sunpictures/status/1556328206323847168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1556328206323847168%7Ctwgr%5E6a3394ac6f95776be67d4a0e0a137a83f...
புனித் ராஜ்குமார் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்

புனித் ராஜ்குமார் நினைவாக இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  ஆக்டர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார், போன வருஷம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இளம் வயதிலே அவர் மறைந்தது இந்திய அளவில் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திச்சு. ‘அப்பு’ எனச் செல்லமாக அழைக்கப்படும் புனித், பாடகர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்டிருந்தார். அவர் நினைவாக, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், மைசூர் மிஷன் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். புனித் ராஜ்குமாரை நினைவுபடுத்தும் விதமாக, ‘அப்பு எக்ஸ்பிரஸ்’ என்று இந்த ஆம்புலன்ஸுக்கு பெயரிடப்பட்டிருக்குது. இதற்காக நடந்த விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், நூற்றாண்டுக்கும் மேலாக ஏழைகளுக்காகச் சேவை செய்து வரும் மிஷன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்குமாறு நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார். “கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்...
மின் கட்டண உயர்வு பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

மின் கட்டண உயர்வு பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவு மின் கட்டணம் உயர உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஆன்லைன் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே பொது மக்களை நேரில் அழைத்து கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை நகரங்களில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. கோவையில் வருகிற 16-ந்தேதி எஸ்.என்.ஆர். கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. மதுரையில் தள்ளாக...