சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்திய சர்தார் படகுழு!

அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்திய சர்தார் படகுழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருக்கிறார். மேலும், ராஷிகண்ணா, ரஜீஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ்.லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கார்த்தி நடித்த படங்களிலேயே இது தான் அதிக செலவில் எடுக்கப்பட்டுவரும் படம். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதுவரை படப்பிடிப்பு நடக்காத அசர்பைசான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்த இரு இடங்களி...
24 முட்டைகள் 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து போட்ட கோழி !

24 முட்டைகள் 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து போட்ட கோழி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. ஆலப்புழாவை அடுத்த புன்னம்புறாவை சேர்ந்த பிஜூ என்பவர் இங்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அங்கு கலப்பின கோழிகளை வளர்த்து வந்தார். இவரது பண்ணையில் சுமார் 25 கோழிகள் உள்ளன. நேற்று காலையில் பிஜூ, பண்ணையில் உள்ள கோழிகளை பார்வையிட்டார். அப்போது ஒரு கோழி வித்தியாசமாக மண்ணை நோண்டிக்கொண்டிருந்தது. அதன் அருகில் சென்ற பிஜூ, அந்த கோழியின் காலில் எண்ணை தடவி விட்டார். சிறிது நேரத்தில் அந்த கோழி, தான் தோண்டிய மண்ணுக்குள் முட்டை இட தொடங்கியது. காலை 8.30 மணிக்கு முதல் முட்டை போட்டது. அதன்பின்பு சிறிது நேரத்திற்கு ஒரு முறை முட்டை போட்டபடி இருந்தது. இதை கண்டு ஆச்சரியமடைந்த பிஜூ, அந்த கோழியை கண்காணித்தபடி இருந்தார். மதியம் 12.30 வரை சுமார் 6 மணி நேரம் அந்த கோழி முட்டை போட்டபடி இருந்தது. மொத்தம் 24 முட்டைகள் போட்டது. அதன்பின்பு அந்த க...
அரசு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை பணியமர்த்த பிரதமர் மோடி உத்தரவு !

அரசு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை பணியமர்த்த பிரதமர் மோடி உத்தரவு !

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய அரசின் அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனித வளங்களின் நிலை குறித்த மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதற்கிடையே, வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது. இந்நிலையில், அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தார். அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது....
சுழல் தொடர் சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் அழகான படைப்பு – ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்

சுழல் தொடர் சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் அழகான படைப்பு – ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்

CINI NEWS, HOME SLIDER, TV news, சினி நிகழ்வுகள்
சுழல் தொடர் சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் அழகான படைப்பு ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ் பாகுபலி, ஜெய் பீம் போன்ற படங்களைப் பார்த்திருக்கிறீர்களா ? - மிகவும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த படங்கள், நில எல்லைகளை கடந்த, அனைவருக்கும் நெருக்கமான அழகான படைப்புகள் . “சுழல்- சுழல் உங்களுக்கு அதே போன்ற உணர்வை தரும்” : அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடர் சுழல் குறித்து ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ். சுழல்- தி வோர்டெக்ஸ் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது, இந்த சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் படி உருவாகியுள்ளது. இந்தத் தொடர் பரபர திருப்பங்களுடன் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களுடன் பார்வையாளர்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் வெல்லும் படி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சுழல்- தி வோர்டெக்ஸ் இணைய தொடரில் நடித்த நடிகர்கள் தொடரின்...
பஞ்சு அருணாச்சலம் 80 வது ஆண்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா !

பஞ்சு அருணாச்சலம் 80 வது ஆண்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 வது ஆண்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்களை கௌரவப்படுத்தும் விழா ! தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தளார், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட ஆளுமை திரு பஞ்சு அருணாச்சலம் அவர்களின் 80 ஆண்டு விழா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா தலைமையில், தமிழ் திரையுலகின் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்ள, வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை PA Art Productions மற்றும் Black Sheep இணைந்து ஆகஸ்ட் மாதம் நடத்தவுள்ளனர். இவ்விழாவிற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்கும் சந்திப்பில்.. திரைப்பிரபலங்கள் பாரதிராஜா, கலைப்புலி தாணு, கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், ஆர் கே செல்வமணி, அன்பு செழியன், காட்ரகடா பிரசாத், உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவிற்கான லோகோவை அறிமுகப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து பத்திரிக்கை ஊடக நண்பர்...
“விக்ரம்” பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு!!

“விக்ரம்” பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு!! இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய "இதயமே இதயமே... உன்னைத் தேடித் தேடி..." என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குனர் தினேஷ் படமாக்கி வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த வசந்தி பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றுபவர். இன்று கொடைக்கானலில் நடந்துவரும் படப்பிடிப்பில் பணியாற்ற வந்த நடிகை வசந்திக்கு படக்குழு சார்பில் ...
உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், உலகம், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்....
1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு!

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 2022-23-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் அவர்களுக்கு ஆரம்பாகிறது. கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்க உள்ளன. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆனால் இது திட்டமிடலுக்கான நேரம்தான் என்றும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் அமைவிடம், வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்...
பெண்கள் இருக்கையில் ஆண்கள் பயணம்- ரூ.17000 அபராதம் வசூலிப்பு !

பெண்கள் இருக்கையில் ஆண்கள் பயணம்- ரூ.17000 அபராதம் வசூலிப்பு !

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓடும் நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் அமர்ந்து சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து கழக ஊழியர்கள், நடத்திய சோதனையில் 170 ஆண்கள் பல்வேறு நகர பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து பயணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணிகளிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பி.எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது....
வைரலாகும் தளபதி 66 பட  ஸூட்டிங் புகைப்படம்!

வைரலாகும் தளபதி 66 பட ஸூட்டிங் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் விரைவில் அடுத்தக...