ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

குழந்தைகளை பாலியல் தொல்லை கொடுப்பவர்களை சுட்டுக் கொல்லனும் என்கிறார் சோனியா அகர்வால்

குழந்தைகளை பாலியல் தொல்லை கொடுப்பவர்களை சுட்டுக் கொல்லனும் என்கிறார் சோனியா அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்: சோனியா அகர்வால் பேச்சு! பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் 'கிராண்மா' . இப்படத்தை ஷிஜின்லால் எஸ். எஸ். இயக்கியுள்ளார் . யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார். ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ளனர். 'கிராண்மா' படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பு இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ்., தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர், படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி, சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர் பேசும்போது, "நான் படம் தயாரிப்பது என்று முடிவு ...
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர். இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகிறது. ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டிரைலரில் அதிகமான காட்சிகளில் தனுஷ் இடம்பெறவில்லை என்றாலும் அவருடைய ர...
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி சேவைகள் மற்றும் 2022-23-ம் கல்வி ஆண்டு நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அதற்கான தமிழ்வழி சான்றிதழை பள்ளிக்கு சென்று வாங்கி வந்தனர். இனி சான்றிதழ்கள் ஆன்லைன் வழியாக வழங்கப்படும். அதேபோல் இணை படிப்புகளுக்கான சான்றிதழ், மைக்ரேஷன் சான்றிதழ் உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்கள் இனி ஆன்லைன் வழியாக இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். இது எளிதான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்கள் 100-க்கும் மேலான பதிவேடு பராமரித்து வ...
பிரபலங்களின் பாராட்டுக்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாலை நேர மல்லிப்பூ

பிரபலங்களின் பாராட்டுக்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாலை நேர மல்லிப்பூ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிற...
“‘1947- ஆகஸ்ட் 16” இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை – தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்

“‘1947- ஆகஸ்ட் 16” இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை – தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள்
A.R. Murugadoss Productions நிறுவனம் Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து வழங்க, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “1947 ஆகஸ்ட் 16” ! தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களை இயக்குவது தொடங்கி பாலிவுட்டில் அமீர் கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தது வரை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனும் பெயர் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநராக மட்டுமன்றி அவரது நிறுவனத்தின் மூலம், சில திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு பிரகாசமான அறிமுகத்தை உருவாக்கி, இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர் பல ஆண்டுகளாக மறக்கமுடியாத பல திரைப்படங்களை கொடுத்துள்ளார், அவரது முதல் தயாரிப்பு, Fox Star Studios உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. பல்வேறு களங்களிலான உள்ளடக்கம் மற்றும் தனித்துவமான கதைகளை உருவா...
Nakshatra Villas at thiruporur by Roofvest!

Nakshatra Villas at thiruporur by Roofvest!

HOME SLIDER, செய்திகள்
திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ அறிமுகம்.. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம், அமைதியான சூழல், பாதுகாப்பான சுற்றுசூழல் என இன்றைய வீடு வாங்குபவர்களின் தேவைகள...
இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினி

இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். ‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையர...
ஹர்த்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்திர சேவாக்!

ஹர்த்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்திர சேவாக்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த ஆண்டு தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்  கடைசி 2 இடங்களை பெற்று வெளியேறின. இளம் கேப்டன்களை கொண்ட குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர் அணி  குவாலிஃபயருக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்த்திக் பாண்டியாதான் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா தான். அவருக்கு சிறப்பான தலைமை பண்பு இருக்கும்  என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் பேட்டிங் செ...
பேரறிவாளன் குற்றமற்றவர்- திருமாவளவன் பேட்டி!

பேரறிவாளன் குற்றமற்றவர்- திருமாவளவன் பேட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ் சமூகத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு தமிழர்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உழைத்தவர் சி.பா ஆதித்தனார். ஆனால் இப்போது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் அதற்கு எதிராக நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். பேரறிவாளனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனர் என்ற கேள்விக்கு, ‌உச்சநீதி மன்றமே அவரை விடுதலை செய்துள்ளது எனவே தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு அவர் குற்றவாளி எனவும் நீதிபதி தெரிவிக்கவில்லை. அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அரசியல் காரண...