ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: உமர் அப்துல்லா!

காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: உமர் அப்துல்லா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான ரஜோரி மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த உமர் அப்துல்லா, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் 3 படுகொலைகள் நடந்துள்ளது. சட்டப்பிரிவு 370 தொடர்பான விவகாரத்தில் எங்கள் கருத்துக்களை கோர்ட்டில் எடுத்துரைப்போம். சட்டத்தை நாங்கள் எங்கள் கைகளில் எடுக்கமாட்டோம். நாங்கள் வேறொரு நாட்டின் மொழியைப் பேசுபவர்கள் அல்ல' என்றார்...
இன்று தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்று தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை ,திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை ) முதல் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன....
ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தானில் தடை!

ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தானில் தடை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. நிதிபற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அன்னிய செலவாணி கையிருப்பு மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை என பல்வேறு பிரச்சினைகளை அந்தநாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி ஷபாஸ் ஷெரீப் கூறுகையில், "தேவையற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விலைமதிப்பற்ற அன்னிய செலாவணி செலவிடப்படாது" என கூறினார்....
மீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு!

மீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது....
அதிமுக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்!!

அதிமுக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது இதையடுத்து தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்தார். அதன்படி நேற்று சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமது தாயாருடன் சென்று நேரில் சந்தித்த பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். பேரறிவாளன் சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன். சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்த...
ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்-தலிபான்கள் உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்-தலிபான்கள் உத்தரவு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் தங்களின் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெ ண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர தலிபான்கள் தடை விதித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என தலிபான்கள் உத்தரவு பிறப்...
கேன்ஸ் விழாவில் உற்சாகமாக பேசிய இசைப்புயல் ரஹ்மான் I Music maestro AR Rahman at Cannes Film Festival

கேன்ஸ் விழாவில் உற்சாகமாக பேசிய இசைப்புயல் ரஹ்மான் I Music maestro AR Rahman at Cannes Film Festival

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள்
கேன்ஸ் விழாவில் உற்சாகமாக பேசிய இசைப்புயல் ரஹ்மான் I Music maestro AR Rahman at Cannes Film Festival   https://youtu.be/pyfZenemetU
புது மாப்பிள்ளை இமானுக்கு முன்னாள் மனைவி மோனிகா வாழ்த்து!

புது மாப்பிள்ளை இமானுக்கு முன்னாள் மனைவி மோனிகா வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
புது மாப்பிள்ளை இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் அடித்திருக்கும் கமெண்ட் இதுதான் டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள்...
அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது:  இயக்குநர் பேரரசு ‘கலகல’ பேச்சு

அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது: இயக்குநர் பேரரசு ‘கலகல’ பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். 'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில், '' இப்படத்தின் கதாநாயகன் சிவ...
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு!

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குநர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார். இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போ...