குறை இல்லா ‘குற்றம் 23’ விமர்சனம்
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அந்த பாதிரியாரை பார்க்க செல்லும் பெண் காணாமல் போகிறார். காணாமல் போன அந்த பெண்ணின் கணவரான பிரபல தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரான விஜயகுமாரின் உதவியை நாடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை ஆணையராக வரும் அருண் விஜய் அந்த பெண் மாயமானது குறித்த தீவிர விசாரணையில் இறங்குகிறார்.
அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் நாயகி மகிமா நம்பியார். அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய் மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார்.
இந்த சம்பவம் குறித்து அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்...
